மேலும் அறிய

Anand Babu : ”நான் குடிகாரனா? மனநலம் பாதிக்கப்பட்டவனா?” : சர்ச்சைக்கு நடிகர் நாகேஷ் மகன் ஆனந்த் பாபு பதிலடி..

"அதேபோல நான் உயிரோடு இருக்கும்பொழுதே , இறந்துவிட்டதாக எழுதுறாங்க. அது எப்படின்னா ஒரு மனிதன் எப்போது சாவான்னு கழுகு சுத்திட்டே இருக்கும். அதுபோல இருந்துடாதீங்க."

பழம்பெரும் நடிகரான நாகேஷின் மகன்தான் ஆனந்த் பாபு. 80-  களின் சில படங்களில் கதாநாயகனாகவும் , சில படங்களில் இரண்டாம் நிலை ஹீரோவாகவும் நடித்து கலக்கியவர். நடனத்தின் தந்தை பேர் சொல்லும் பிள்ளையாக விளங்கிய ஆனந்த் பாபு , அந்த காலக்கட்டத்தில் தனக்கென தனி நடன பாணியையே வைத்திருந்தார். சில காலங்கள் மட்டுமே நடித்த ஆனந்த் பாபு, சினிமாவில் அப்பா நாகேஷ் அளவிற்கு கோலோச்ச முடியவில்லை. ஆனந்த் பாபு 24 மணிநேரமும் குடிபோதையில் இருப்பதாகவும் ,மன நலம் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இது குறித்து மனம் திறந்திருக்கிறார் நடிகர் ஆனந்த் பாபு .

Anand Babu : ”நான் குடிகாரனா? மனநலம் பாதிக்கப்பட்டவனா?” : சர்ச்சைக்கு நடிகர் நாகேஷ் மகன் ஆனந்த் பாபு பதிலடி..
அதில் “வேலூரில் நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். மனநிலை பாதிக்கப்பட்டிருந்தேன் அப்படின்னு எழுதினாங்க. ஃபோட்டோகிராஃபர்ஸ் , பத்திரிக்கையாளர்களை நான் தப்பு சொல்லவில்லை. ஆனால் எழுதுவதற்கு முன்னதாக என்ன உண்மை அப்படிங்குறத தெரிந்து எழுதணும். உண்மையில் அன்னைக்கு என்ன நடந்தது அப்படீன்னா, எனது நண்பர் அவர் ஒரு மருத்துவர், என் கூட படித்தவர், அவரை பார்க்க போயித்தான் , இப்படி எழுதிட்டாங்க. உண்மை என்ன என்பது குறித்து என்னிடம் கேட்டிருக்கலாம். எல்லாம் எழுதிவிட்டு என்னிடம் வந்து கேட்பது சரியா ? அதை முன்னதாகவே செய்திருக்கலாமே ! எவ்வளவோ செய்திகள் வருது! நிறைய பேர் குடித்துவிட்டு , விபத்தைக்கூட ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் நான் அப்படியாக செய்ததாக எந்தவொரு ஆவணங்களும் கிடையாது. நான் குடிப்பேன். அது தனிப்பட்ட விஷயம். ஆனால் அதை ஏன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தீங்கன்னு நான் கேட்கவில்லை. நான் அளவாக குடித்துவிட்டு , வீட்டில் படுத்து தூங்குகிறேன்.

வெளியில் விழுந்து கிடந்தேனா?  ஃபோட்டோ எடுத்து போட்டுருக்கீங்களா ?அதை ஏன் 24 மணிநேரமும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கார் அப்படின்னு எழுதணும்.அதேபோல நான் உயிரோடு இருக்கும் பொழுதே , இறந்துவிட்டதாக எழுதுறாங்க. அது எப்படினா ஒரு மனிதன் எப்போது சாவான்னு கழுகு சுத்திட்டே இருக்கும். அது போல இருந்துடாதீங்க. என்னென்னவோ போடுருக்காங்க. என் குடும்பத்தினரிடம்  இதையெல்லாம் கண்டுக்காதீங்கனு சொல்லிட்டேன். நான் இறந்து போயிட்டேன்னு செய்தி வெளியானது நான் சிரிச்சுட்டேன். நான் அவங்களை தொடர்புகொண்டு பேசவில்லை . நான் தரம் தாழ்ந்த மனிதர்களுடன் பேசுவதில்லை.  இதை சொல்லும் பொழுது என் அப்பா நியாபகம் வருது. என் அப்பா மகளிர் மட்டும் படத்துல அச்சு அசலா இறந்தவர் போல நடித்தார். அதற்கு சிவாஜி சார் கூட கால் பண்ணி பாராட்டியிருந்தார்” என தன்னை குறித்து வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்தார் ஆனந்த் பாபு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget