உள்ளாடை பற்றிய டவுட்... தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதுங்க.. அமிதாப் பச்சனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Amitabh Bachchan: ஒரு துறையில் சிறந்து இருக்கும் ஒருவர் எல்லா விஷயங்களிலும் அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அமிதாப் பச்சனுக்கு சில குழப்பங்கள் அதை தெரிந்தவர்கள் தீர்த்து வைக்கலாம்!
பாலிவுட்டின் ‘பிக் பி’, இந்திய சினிமாவின் உச்ச நடிகர் என்றெல்லாம் போற்றப்படும் அமிதாப் பச்சன்(Amitabh Bachchan), தனது ட்விட்டர் பக்கத்தில் 10 ஆண்டுகளுக்கும் முன் பதிவிட்ட விபரீதமான ட்வீட் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அமிதாப் பச்சன்
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ற வகையில் தனது நடிப்பை அவர் புதுப்பித்து வருவதே இத்தனை ஆண்டுகள் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக அவர் இருப்பதற்கு முக்கியக் காரணம். ஆனால் நடிப்பில் அப்டேட்கள் செய்த அமிதாப் பச்சன் மற்ற விஷயங்களில் முழுவதுமாக அப்டேட் ஆகவில்லையோ என்கிற கேள்வி தற்போது இணையதள வாசிகளின் கேள்வியாக இருக்கிறது. இதற்கு காரணம் 10 ஆண்டுகளுக்கு முன் அமிதாப் பச்சனுக்கு எழுந்த ஒரு சின்ன சந்தேகம் தான்.
அது என்ன சந்தேகம்
T26 -In the English language, why is 'bra' singular and 'panties' plural ...
— Amitabh Bachchan (@SrBachchan) June 12, 2010
2010ஆம் ஆண்டு புதிதாக ட்விட்டர் கணக்கு தொடங்கியிருந்தார் அமிதாப் பச்சன் . தான் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் கணக்கு வைத்துக்கொள்வது அவரது வழக்கம். அந்த வகையில், தனது 26ஆவது பதிவில் அமிதாப் பச்சன் தனது சந்தேகம் ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது ஆங்கிலத்தில் “பெண்களின் உள்ளாடை bra என்கிற வார்த்தை மட்டும் ஒருமையிலும் panties என்கிற வார்த்தை மட்டும் பண்மையில் இருப்பதற்கு என்ன காரணம்” என்பதே அவரது சந்தேகம். வேறு யாருக்காவது இந்த சந்தேகம் எழுவதற்குள்ளாக நாம் இதற்கான பதிலை தெரிந்துகொள்ளலாம்
brassiere என்கிற வார்த்தையின் சுருக்கமாகவே bra பயன்படுத்தப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையைக் குறிப்பிட bras என்று குறிப்பிடுவார்கள். அதேபோல் ஒருமையில் panty என்றும் பன்மையில் panties என்றும் குறிப்பிடுவர்.
இனிமேல் டவுட்டே வராது
இந்நிலையில் இப்போது நாம் மீண்டும் அமிதாப் பச்சனுக்கு வரலாம். இப்படி ஒரு கேள்வியை அந்த பெரிய மனிதரிடம் இருந்து எதிர்பார்க்காத அவரது ரசிகர்கள், அவருக்கு நிஜமாகவே இந்த குழப்பம் வந்ததா, இல்லை தான் ஏதோ ஒரு அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்டதாக நினைத்து இதனை செய்தாரா என்று தாங்களும் குழம்பி வருகின்றனர்.
சமூக வலைதளத்தில் புதிதாக ஏதாவது செய்து கவனம் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே அவர் இப்படி செய்ததாக சிலர் கூறுகிறார்கள். சிலர் “பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இப்படியான நகைச்சுவைகளை செய்வது தவறு” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். “நாம் மிகவும் மதிக்கும் நபர்களின் சமூக வலைதளப் பக்கத்தை சில மணி நேரம் அலசினால் போதும், அவர்களைப் பற்றிய பல உண்மைகள் தெரியவருகிறது” என்றும் நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நல்ல வேலையாக இந்த குழப்பம் மற்ற திரைப் பிரபலங்களுக்கும் தொற்றிக் கொள்ளவில்லை!