மேலும் அறிய

சினிமாவின் எவரெஸ்ட் சிகரம்... கமல்ஹாசனை சந்தித்த அல்ஃபோன்ஸ் புத்திரன் நெகிழ்ச்சி!

Alphonse Puthren Meets Kamal Haasan: தன் ஆதர்ச நடிகரான கமல்ஹாசனை சந்தித்து நெகிழ்ச்சியுடன் அல்ஃபோன்ஸ் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா தாண்டி தென்னிந்தியா, வட இந்தியா என எந்த சினிமாதுறையைச் சேர்ந்தவருக்கும் நடிகர் கமல்ஹாசனை சந்திப்பதும், அவருடன் பணிபுரிவதும் பெரும் கனவாகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து மகிழ்ந்த பிரபல மலையாள இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் நெகிழ்ச்சியுடன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நேரம், பிரேமம் படங்களின் மூலம் தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் பெரும் பிரபலமைடந்தவர் மலையாள இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன்.

குறிப்பாக பிரேமம் படம் மலையாள சினிமா உலகுக்கே திருப்புமனை படமாக அமைந்ததோடு தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் பெரும் வரவேற்பைப் பெற்றது ஓடித்தீர்த்தது. தொடர்ந்து பிரேமம் படத்துக்குப் பிறகு 7 ஆண்டுகள் இடைவெளிவிட்ட அல்ஃபோன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் முன்னதாக கோல்ட் படம் வெளியானது.

பிருத்விராஜ், நயன்தாரா நடிப்பில் முன்னதாக வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், தன் அடுத்த படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டுள்ள அல்ஃபோன்ஸ் புத்திரன்.

இந்நிலையில், முன்னதாக தன் ஆதர்ச நடிகரான நடிகர் கமல்ஹாசனை சந்தித்து நெகிழ்ச்சியுடன் அல்ஃபோன்ஸ் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
“சினிமாவின் எவரெஸ்ட் சிகரம் உலக நாயகன் கமல்ஹாசனை முதன்முறையாக சந்தித்தேன். அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். கிட்டத்தட்ட 5 முதல் 6 சினிமாக் கதைகளை அவரிடமிருந்து கேட்டேன்.

 பத்தே நிமிடங்களில் எனது புத்தகத்தில் சிறு குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். ஒரு தேர்ந்த கலைஞராக அவர் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ஆனால் ஒரு மாணவனாக அவர் சொன்னவற்றில் எதையாவது நான் தவறவிட்டுவிடுவேனோ என்று பயந்தேன்.

 “இந்த வாய்ப்பை எனக்களித்த பிரபஞ்சத்துக்கு நன்றி. இந்த நம்பமுடியாத, அழகான அனுபவத்துக்கு ராஜ்கமல் நிறுவனம், மகேந்திரன் மற்றும் டிஸ்னிக்கு நன்றி”  என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Alphonse Puthren (@puthrenalphonse)

ஏற்கெனவே மாலிக் படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் உடன் தேவர் மகன் 2 படத்துக்காக கமல்ஹாசன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Politics: ”ஒன்று சேர், புரட்சி செய்” மோடில் பாஜக.. நவகிரகங்கள், பீகார் ஃபார்முலா?தமிழகத்தில் சாத்தியமா?

எவ்வளவு நாள் தான் நாங்களும் ஏமாந்துகிட்ட இருப்பது.! இந்த முறை முடியவே முடியாது- சீறிய பிரேமலதா

TN weather Report:  7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் மிக கனமழை? தமிழக வானிலை அறிக்கை

Bihar Govt: சி.எம்., சேர் உங்களுக்கு, மத்ததெல்லாம் எங்களுக்கு - நிதிஷ்குமாரிடம் டீலிங்கை லாக் செய்யும் பாஜக

ABP Premium

வீடியோ

”என் காதலை சேர்த்து வைங்க” அதிமுக நிர்வாகியின் REQUEST! THUGLIFE செய்த வைகைச்செல்வன்
ஐயப்ப பக்தர்கள் கட்டுப்பாடு! பம்பையில் நீராட தடை? கேரள அரசு அதிரடி
அக்கா மீது செருப்பு வீச்சு!  எல்லைமீறிய தேஜஸ்வி! உடையும் லாலு குடும்பம்
கண்ணைக் கவரும் விளக்குகள் அகல்கள் தயாரிக்கும் பணி தீவிரம் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை | Karthigai Deepam 2025 |
Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Politics: ”ஒன்று சேர், புரட்சி செய்” மோடில் பாஜக.. நவகிரகங்கள், பீகார் ஃபார்முலா?தமிழகத்தில் சாத்தியமா?
TN Politics: ”ஒன்று சேர், புரட்சி செய்” மோடில் பாஜக.. நவகிரகங்கள், பீகார் ஃபார்முலா?தமிழகத்தில் சாத்தியமா?
எவ்வளவு நாள் தான் நாங்களும் ஏமாந்துகிட்ட இருப்பது.! இந்த முறை முடியவே முடியாது- சீறிய பிரேமலதா
எவ்வளவு நாள் தான் நாங்களும் ஏமாந்துகிட்ட இருப்பது.! இந்த முறை முடியவே முடியாது- சீறிய பிரேமலதா
TN weather Report:  7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் மிக கனமழை? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் மிக கனமழை? தமிழக வானிலை அறிக்கை
Bihar Govt: சி.எம்., சேர் உங்களுக்கு, மத்ததெல்லாம் எங்களுக்கு - நிதிஷ்குமாரிடம் டீலிங்கை லாக் செய்யும் பாஜக
Bihar Govt: சி.எம்., சேர் உங்களுக்கு, மத்ததெல்லாம் எங்களுக்கு - நிதிஷ்குமாரிடம் டீலிங்கை லாக் செய்யும் பாஜக
OG Sierra vs New Sierra: ஒஜி சியாரா Vs டாடாவின் புதிய சியாரா.. இன்ஜின் வித்தியாசம் என்ன? எவ்வளவு சக்தி வாய்ந்தது?

Superstar: சூப்பர்ஸ்டார் யாரு? அடித்துக்கொள்ளும் ரஜினி - அஜித் ரசிகர்கள்.. உள்ளே வந்த விஜய் ஃபேன்ஸ்!

Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Hyundai Creta கார் வாங்க போறீங்களா? தரமும், விலையும் எப்படி?

Embed widget