மேலும் அறிய

Allu Arjun: “மகள்தான் ஃபர்ஸ்ட்... மத்தது எல்லாம் நெக்ஸ்ட்” - வைரலாகும் அல்லு அர்ஜூனின் வீடியோ

நடிகர் அல்லு அர்ஜூன்  காரில் சென்று கொண்டிருக்கும்போது தனது மகளை கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

நடிகர் அல்லு அர்ஜூன்  காரில் சென்று கொண்டிருக்கும்போது தனது மகளை கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

எதிர்பார்ப்பில் புஷ்பா -2 

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அல்லு அர்ஜூன் இன்று  முன்னணி நடிகராக உள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகியிருந்தது. சுகுமார் இயக்கிய இப்படத்தில் ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும், முதல் பாகத்தில் வில்லனாக பஹத் ஃபாசிலும் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியிருந்தது  வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா படம் கிட்டதட்ட ரூ.400 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது. 

இதற்கிடையில் அல்லு அர்ஜூன் புஷ்பா படத்தின் 2 ஆம் பாகமான புஷ்பா - தி ரூல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அல்லு அர்ஜூன் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு புஷ்பா படத்தின் 2 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

காளி உருவத்தில் மிகவும் கம்பீரமான லுக்கில், ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல்கள், வங்கி, ஒட்டியாணம் உள்ளிட்ட  நகைகள் அணிந்து எலுமிச்சை மாலையுடன் புடவையில் கர்வமாக நிற்கும் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயினர். படத்துக்கும் இந்த போஸ்டருக்கு என்ன சம்பந்தம் என்னும் அளவுக்கு புஷ்பா படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Allu Arjun (@alluarjunonline)

மகளின் சினிமா அறிமுகம்

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகை சமந்தா நடிப்பில் வெளியான படம் சாகுந்தலம். இந்த படத்தில் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹா சிறப்புத் தோற்றத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.  அல்லு அர்ஜூன் - ஸ்நேஹா ரெட்டியின் இரண்டாவது குழந்தையான அல்லு அர்ஹா அல்லு அர்ஜூனின் நெருங்கியத் தோழியான சமந்தாவுடன் அறிமுகமாகியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்காக அப்படத்தின் இயக்குநர் குணசேகரனுக்கு நன்றி தெரிவித்து நடிகர் அல்லு அர்ஜூன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். 

மகளுடன் கொஞ்சல் விளையாட்டு 

இதற்கிடையில் அல்லு அர்ஜூன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் அல்லு அர்ஹாவை கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பொதுவாக அவர் தனது குழந்தைகளான அயன் மற்றும் அர்ஹாவுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவதை அடிக்கடி காணலாம். அப்பா-மகள் இருவரும் ஒருவரையொருவர் கொஞ்சுவதோடு பின்னணியில் இளையராஜாவின் தும்பி வா என்ற மலையாளப் பாடலின் பின்னணி இசை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அப்பா - மகள் பாசத்தைப் பற்றி சிலாகித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget