'குடும்பத்தைக் கையாள கற்றுக்கொண்டால் சமூகத்தை எளிமையாக கையாண்டு வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்' - நடிகர் இளவரசு
ஒவ்வொரு தனிமனிதனும் குடும்பத்தைக் கையாள கற்றுக்கொண்டால் சமூகத்தை எளிமையாக கையாண்டு வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்- நடிகர் இளவரசு
விழுப்புரம் : குடும்பத்தைக் கையாள கற்றுக்கொண்டால் சமூகத்தை எளிமையாக கையாண்டு வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் நடிகர் இளவரசு கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பவ்ம் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பதினைந்தாம் ஆண்டு விழா கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் ம.இளவரசு அவர்கள் பல்கலைக்கழக அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கி சிறப்பு செய்தார்.
பின்னர் அவர் பேசுகையில், “மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்றோரிடம். நண்பர்களை போல பழக வேண்டும். அவர்களிடம் உண்மையாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் குடும்பத்தைக் கையாள கற்றுக்கொண்டால் சமூகத்தை எளிமையாக கையாண்டு வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்” என மாணவர்கள் அனைவரையும் வாழ்த்திப் பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்