மேலும் அறிய

Alia Bhatt: பாலிவுட் ஸ்டார் ஆலியா பட் கிச்சனில் இடம்பெற்ற தென்னிந்திய சமையல்; என்ன ரெசிபின்னு தெரியுமா?

Alia bhatt:தென்னிந்திய உணவுகள் மீது விருப்பம் கொண்ட பாலிவுட் பிரபலம் ஆலியா பட் தனது சமயலறையில் இருந்து நமக்காக சில ஆரோக்கியமான மற்றும் உடல் எடையை குறைக்க  கூடிய ஸ்பெஷல் ரெஸிபிகளை பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய உணவுகளின் சிறப்பே அதன் அறுசுவை தான். இதனை மிஞ்சவோ அல்லது இணையாகவோ வர எந்த ஒரு நாடாளும் முடியாது. இங்கு அறுசுவை மட்டுமின்றி ஆரோக்கியமும் உணவோடு ஒன்றியே இருக்கும். நமது நாட்டின் பாரம்பரியமான உணவுகளே மருந்தாக விளங்குகிறது என்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டும்.

தென்னிந்திய உணவுகள் மீது விருப்பம் கொண்ட பாலிவுட் பிரபலம் ஆலியா பட் தனது சமயலறையில் இருந்து நமக்காக சில ஆரோக்கியமான மற்றும் உடல் எடையை குறைக்க  கூடிய ஸ்பெஷல் ரெஸிபிகளை பகிர்ந்துள்ளார்.

அந்த வரிசையில் முதலில் நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் குறைந்த அளவிலான கலோரிகளை கொண்ட சுரைக்காயை வைத்து ஒரு ரெசிபியை பகிர்ந்துள்ளார். சுரைக்காயை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும். 

தென்னிந்திய ஸ்டைலில் ஆலியாவின் சுரைக்காய் சப்ஜி இதோ:

Alia Bhatt: பாலிவுட் ஸ்டார் ஆலியா பட் கிச்சனில் இடம்பெற்ற தென்னிந்திய சமையல்; என்ன ரெசிபின்னு தெரியுமா?
1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி அதில் கடுகு தாளித்து, பெருங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.  பிறகு  சிறு துண்டுகளாக நறுக்கிய சுரைக்காயை சேர்த்து வதக்கி இரண்டு நிமிடங்கள் முடி வைக்கவும். பிறகு 1/4 டீஸ்பூன் உலர் மாங்காய் தூள், 1/4 டீஸ்பூன் சோம்பு தூள், 1/4 டீஸ்பூன் ஜீரக தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் தனியா தூள் சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு 2 ஸ்பூன் தேங்காய் துருவல், பொடியை நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கிளறிய பிறகு சூடாக பரிமாறவும்.

கீட்டோ உப்புமா:
Alia Bhatt: பாலிவுட் ஸ்டார் ஆலியா பட் கிச்சனில் இடம்பெற்ற தென்னிந்திய சமையல்; என்ன ரெசிபின்னு தெரியுமா?

ஆலியாவின் அடுத்த ரெசிபி கிடோ காலிஃபிளவர் உப்புமா. நமது பாரம்பரிய ரவா உப்புமா போலவே சுவை கொண்ட இந்த உப்புமாவில் கார்போஹைட்ரேட், கலோரி குறைவாக உள்ளது. இது செய்வதும் மிகவும் எளிது.

செய்முறை :

காலிஃபிளவர் பூக்களை தேங்காய் துருவல் போல் துருவி கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையை சூடாக்கி கடுகு பொரித்து, பச்சைமிளகாய், பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறுது வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும், பிறகு துண்டுகளாக நறுக்கிய பீன்ஸ், ப்ரோக்கோலி, காளான் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். துருவிய  காலிஃபிளவர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் மூடிவைத்து 5 நிமிடங்கள் சமைக்க வேண்டும். பிறகு பொடியை நறுக்கிய கொத்தமல்லி இலை, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து சூடாக பரிமாறவும்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Embed widget