மேலும் அறிய

Akira Toriyama: உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்ட டிராகன் பால் காமிக்ஸ் படைப்பாளி உயிரிழப்பு! சோகத்தில் ரசிகர்கள்

Dragon Ball: டிராகன் பால் காமிக்ஸ் மற்றும் அனிம் தொடர்களின் தந்தை அகிரா டோரியாமா உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், உலகம் முழுவதுமுள்ள இந்தத் தொடர், காமிக்ஸின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பான் நாட்டின் பிரபல காமிக்ஸ் படைப்பாளியான அகிரா டோரியாமா (Akira Toriyama) உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிராகன் பால் 

Akira Toriyama: உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்ட டிராகன் பால் காமிக்ஸ் படைப்பாளி உயிரிழப்பு! சோகத்தில் ரசிகர்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்து ரசிக்கும் காமிக்ஸ் புத்தகங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் பல காலமாக உலகம் முழுவதும் இருந்து வருகிறது. அதில்  ஒருவகை தான் ஜப்பானிய “மாங்கா” (Manga) காமிக்ஸ். வித்தியாசமான கலை வடிவமான இந்த மாங்கா, புத்தகங்கள் தொடங்கி கார்ட்டூன்களாகவும் வடிவமைக்கப்பட்டு பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது.

அப்படி ஜப்பானில் காமிக்ஸ் புத்தகத்தில் தொடங்கி, வெப் சீரிஸ் வரை சக்கை போடு போட்டு வரும் ஒரு படைப்பு “டிராகன் பால்” (Dragon Ball). 1984ஆம் ஆண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டது முதல் ஏராளமான அனிம் தொடர்கள், திரைப்படங்கள், வீடியோ கேம்கள் வரை வெளிவந்து சக்கைபோடு போட்டுள்ளன.

அகிரா டோரியாமா

இந்நிலையில், டிராகன் பால் காமிக்ஸ் மற்றும் அனீம் கார்ட்டூன்களின் தந்தையான அகிரா டோரியாமா உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், உலகம் முழுவதுமுள்ள இந்தத் தொடரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 "மாங்கா படைப்பாளியான அகிரா டோரியாமா மூளையில் ஏற்பட்ட ரத்தம் உறைதல் காரணமாக கடந்த மார்ச் 1ஆம் தேதி தன் 68ஆம் வயதில் உயிரிழந்தார் என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் சாதிக்க இன்னும் பல விஷயங்கள் உள்ளன. எனினும் அகிரா டோரியாமா பல மங்கா பட்டங்களையும் கலைப் படைப்புகளையும் இந்த உலகுக்கு விட்டுச் சென்றுள்ளார். 45 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ள அகிரா டோரியாமா உருவாக்கிச் சென்றுள்ள படைப்புகளும் தனித்துவமான உலகமும் அனைவராலும் இன்னும் பல ஆண்டு காலம் கொண்டாடப்படும்" என்று டிராகன் பால் காமிக்ஸின் அதிகாரப்பூர்வ X கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீய சக்திகளிடமிருந்து பூமியைப் பாதுகாக்கும் போராட்டத்தில் சன் கோகு என்ற சிறுவன் தனக்கும் தன் கூட்டாளிகளுக்கும் உதவுவதற்காக டிராகன்களைக் கொண்ட மாயாஜால பந்துகளைச் சேகரித்து தனது சக்தியை அதிகரிக்கிறான். இந்தக் கதையை மையமாகக் கொண்ட டிராகன் பால் காமிக்ஸ் 40 நாடுகளுக்கும் மேல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விற்றுத் தீர்ந்துள்ளது. மேலும் 80 நாடுகளில் இந்த சீரிஸ் வரவேற்பைப் பெற்று ஸ்பின் - ஆஃப் தொடர்களும் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget