மேலும் அறிய

Rohini Theatre: தியேட்டருக்குள் வெடித்த பட்டாசு.. சிதறி ஓடிய அஜித் ரசிகர்கள்.. என்ன நடந்தது?

சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் வழக்கம்போல ரசிகர்கள் தீனா படத்தை கொண்டாடி தீர்த்தனர். அப்போது தியேட்டருக்குள் சிலர் பட்டாசு வெடித்தனர்.

நடிகர் அஜித் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த ரசிகர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் அஜித் பிறந்தநாள் தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முழுவதும் வழங்கி வருகின்றனர். 

இதனிடையே அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த தீனா, பில்லா உள்ளிட்ட படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த படங்கள் வெளியாகியுள்ள நிலையில் காலை முதல் அஜித் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இப்படியான நிலையில் ஏதோ புதுப்படம் ரிலீஸானதைப் போல தியேட்டர்கள் களைகட்டியுள்ளது. ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் வீடியோ, புகைப்படமாக பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் வழக்கம்போல ரசிகர்கள் தீனா படத்தை கொண்டாடி தீர்த்தனர். அப்போது தியேட்டருக்குள் சிலர் பட்டாசு வெடித்தனர். குறிப்பாக “வத்திக்குச்சி பத்திக்காது” பாடலின்போது பட்டாசு வெடித்ததால் ரசிகர்கள் சிதறி ஓடினர். இதனால் சிறிது நேரம் தியேட்டருக்குள் பரபரப்பு ஏற்பட்டது. 

முன்னதாக தீனா படம் கடந்த 2001 ஆம் ஆண்டு ரிலீசானது. இப்படத்தின் மூலமாக இயக்குநராக ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சாக்லேட் பாயாக இருந்த அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவாக இப்படம் தான் மாற்றியது. இந்த படத்தின் மூலம் தான் அஜித்தை “தல” என அனைவரும் அழைக்க தொடங்கினர். தீனா படத்தில் லைலா, சுரேஷ்கோபி, மகாநதி ஷங்கர் என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
Embed widget