வெறித்தனமாக ரெடியாகும் விடாமுயற்சி முதல் பாடல்..இணையத்தில் பரவும் புகைப்படம்
விடாமுயற்சி படத்தின் முதல் பாடலுக்கு அஜித் மற்றும் அனிருத் இணைந்து ஸ்டுடியோவில் பணியாற்றும்படியான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
விடாமுயற்சி
துணிவு படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது. மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் , அர்ஜூன் , ரெஜினா ,ஆரவ் , த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் விடாமுயற்சி . லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வரும் பொங்கலுக்கு இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
விடாமுயற்சி முதல் பாடல்
படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் காலமே இருக்கும் நிலையில் விடாமுயற்சி படத்தின் பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். குறிப்பாக விடாமுயற்சி டீசரில் இடம்பெற்ற அனிருத்தின் பின்னணி இசை ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்துள்ளது. தற்போது விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அஜித் மற்றும் அனிருத் இணைந்து ஸ்டுடியோவில் பணியாற்றும் புகைப்படங்களும் பரவலாக ஷேர் செய்யப்படுகின்றன.
விடாமுயற்சி பாடல் குறித்து வெளியான தகவல்கள் பொய் என்றும் இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் அனைத்தும் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது.
#VidaaMuyarchiFirstSingle is Getting Ready pic.twitter.com/xdPxzlqnqw
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) December 10, 2024
AI Generated Pics of #AjithKumar Sir and Music Dir #Anirudh Are Trending Big! 📈🔥
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) December 10, 2024
Fans Are Going CRAZY!! 🐉#Vidaamuyarchi | #VidaaMuyarchiFirstSingle pic.twitter.com/KsNvMLXYPZ
குட் பேட் அக்லி
நடிகர் அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கியது. த்ரிஷா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். யோகி பாபு , பிரசன்னா , அர்ஜூன் தாஸ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தேவிஶ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைத்துள்ள நிலையில் பின்னணி இசை ஜி.வி பிரகாஷ் உருவாக்குகிறார்.
மேலும் படிக்க : Siddharth : ஒரு ஜே.சி.பி நிறுத்துனா கூட கூட்டம் வரும்..புஷ்பா 2 படத்தை விலாசிய சித்தார்த்
ஒரு பக்கம் கொரோனா..இன்னொரு பக்கம் கர்ப்பம்..திணறிய கரீனா கபூர்..ஆமீர் கான் கொடுத்த தீர்வு