Ajith - Shalini Photos: அக்கம்பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்.. படகில் காதல் பொங்க பயணிக்கும் அஜித் - ஷாலினி!
அஜித் - ஷாலினி சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.
நடிகர் அஜித் - அவரது மனைவி ஷாலினி இருவரும் வகேஷனில் இருக்கும் புதிய புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன.
துபாயில் காதல் பறவைகள் அஜித் - ஷாலினி
இந்தப் புகைப்படங்கள் துபாயில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அஜித் - ஷாலினி ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களை இணையத்தில் அதிகம் பகிர்ந்து இதயங்களை வாரி வழங்கி வருகின்றனர்.
பொங்கல் ரிலீசாக வெளியான துணிவு படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹிட் அடித்து நல்ல வசூலையும் குவித்தது.
குடும்பத்துடன் பயணம்
இதனையடுத்து நடிகர் அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 குறித்த பல தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தன. ஆனால் இவற்றுக்கிடையே நடிகர் அஜித் வழக்கம்போல் தன் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கி ஃபேமிலி சுற்றுலா மேற்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்து சமூக வலைதள சென்சேஷனாக மாறின.
தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்ட அஜித், போர்ச்சுகல், ஸ்காட்லந்து என குடும்பத்துடனும் தன் பைக்குடனும் பயணித்து சமூக வலைதளப் புகைப்படங்கள் மூலம் லைக்ஸ் அள்ளினார்.
இந்நிலையில் தற்போது துபாயில் நடிகர் அஜித் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தற்போது துபாயில் அவர் தன் காதல் மனைவி ஷாலினியுடன் ப்ரைவேட் போட்டில் பயணிக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளன.
கோலிவுட்டின் ஆல்டைம் ஃபேவரைட் காதல் ஜோடிகளில் ஒருவராகக் கொண்டாடப்படும் அஜித் - ஷாலினி ஜோடி தற்போது இந்தப் படங்களின் மூலம் இணையதள சென்சேஷனாக மாறியுள்ளனர்.
’இந்நிலையில், என்றென்றும் க்யூட் ஜோடி’, ‘வாழ்க்கையை எப்படி வாழ்வதென்று அஜித்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என அஜித் - ஷாலினி ஜோடியை வாழ்த்தி இணையத்தில் நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
1999ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் இணைந்தது நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட அஜித் - ஷாலினி ஜோடி கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டின் விருப்ப ஜோடியாகக் கொண்டாடித் தீர்க்கப்பட்டு வருகின்றனர்.
ஏகே 62
அஜித் தற்போது தனது ஏகே 62 படத்துக்காக முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. முன்னதாக ஏகே 62 படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்குவார் எனத் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகத் தகவல்கள் எதுவும் வராத நிலையில், விரைவில் ஏகே 62 படம் குறித்த அறிவிப்பு வரும் என்றும் அதற்கு முன்னதாக நடிகர் அஜித் தன் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க சுற்றுலா மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.