அஜித்தின் அட்டகாசம் பட ரீரிலீஸ்...திரையரங்கில் பட்டாசு வெடித்த ரசிகர்கள்..போலீஸ் அதிரடி
Attagasam Rerelease : சரண் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த அட்டகாசம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகியுள்ள நிலையில் ரசிகர்கள் படத்தை ஆரவாரம் செய்து கொண்டாடி வருகிறார்கள்

அஜித் குமாரின் அட்டகாசம் திரைப்படம் 21 ஆம் ஆண்டுகள் கழித்து திரையரங்கில் ரீரிலீஸ் ஆகியுள்ளது. அஜித்தின் கரியரில் மிக முக்கியமான படமாகவும் 'தல' என்கிற அடைமொழியை அஜித்திற்கு கொடுத்த படம் அட்டகாசம். இப்படத்தின் ரிலீஸை அஜித் ரசிகர்கள் திரையரங்கில் திரண்டு கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் திரையரங்கிற்கு வந்து எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அட்டகாசம் ரீரிலீஸ்
காதல் மண்ணன் , அமர்க்களம் ஆகிய இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் இயக்குநர் சரண் கூட்டணியில் வெளியான மூன்றாவது படம் அட்டகாசம். பூஜா இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அஜித்தின் கரியரில் மிக முக்கியமான படமாக இப்படம் அமைந்தது மட்டுமில்லாமல் இப்படத்திற்கு பின் ரசிகர்கள் அஜித்தை 'தல' என்று அழைக்கத் தொடங்கினர். தற்போது 21 ஆண்டுகளுக்குப் பின் இப்படம் திரையரங்கில் ரீரிலீஸ் ஆகியுள்ளது . தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் பெங்களூரிலும் இப்படம் வெளியாகியுள்ளது. இரு மாநிலங்களிலும் அஜித் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு படத்தை ஆரவாரம் செய்து கொண்டாடி வருகிறார்கள். மேலும் சில திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.
அலப்பறை கிளப்புறோம்! 🕺🏻🎇
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) November 28, 2025
#Attagasam pic.twitter.com/o6Q3ge4eVx
போலீஸ் எச்சரிக்கை
ரசிகர்களின் ஆரவாரத்தை கட்டுப்படுத்த ஒரு சில திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கிற்குள் வந்த போலீஸ் ரசிகர்கள் எந்த வித தவறான செயல்களிலும் ஈடுபடாமல் படத்தை அமைதியாக பார்த்து ரசித்து செல்லும்படி அறிவுறுத்தியுள்ளது. "
Police Arrived At All Theatres Due To The MASSIVE Celebration 🤠💥
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) November 28, 2025
This is INSANE CRAZE 🔥🔥🔥#Attagasam | #AttagasamReRelease pic.twitter.com/mGa9R5a8wu





















