Daredevil Pooja : ஷாலினி தலைமையில் தொடங்கிய டேர்டெவில் பட பூஜை..அஜித் ஆப்சண்ட்
Daredevil Movie Pooja : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் டேர்டெவில் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ளார். அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘டேர் டெவில்’ (Dare Devil) எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் இன்று படத்தின் பூஜை நடைபெற்றது.
ஷாலினி தலைமையில் டேர்டெவில் பட பூஜை
அஜித்தின் மனைவி ஷாலினி தனது பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார். இது அவர் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்கும் முதல் திரைப்படமாகும். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க இருக்கிறார் மேலும், பார்த்திபன், பிரபு, சுனில் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இன்று சென்னையில் நடைபெற்ற பட பூஜையில் தயாரிப்பாளர் ஷாலினி , நடன இயக்குனர் கல்யாண், அனிருத், உன்னி முகுந்தன், பார்த்திபன், ஸ்ரீலீலா, பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் அஜித் தற்போது துபாயில் இருப்பதால் இந்த பட பூஜையில் அவர் கலந்துகொள்ளவில்லை. தீபாவளி பண்டிகை முடிந்தபின் அஜித் டேர்டெவில் படப்பிடிப்பில் இணையவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் நடைபெற உள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















