மேலும் அறிய

பாலா, சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை!

எட்டு வருடங்களுக்குப் பிறகு அதர்வா முரளியும் பாலாவும் மீண்டும் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகரான சூர்யா நடிப்பதில் மட்டுமல்லாது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பது மட்டுமல்லாமல், அறிமுக இயக்குநராக இருந்தாலும் பரவாயில்லை  கதைக்களம் வலிமையான இருந்தால் போதும் என பல படங்களை தயாரித்தும் வருகிறார்.  இவர் தயாரிப்பில் வெளியான  36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் உள்ளிட்ட படங்கள் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியாக வெளியான உடன்பிறப்பே திரைப்படமும் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் பாலா இயக்கத்தில் புதிய படத்தை சூர்யா தயாரிக்கவுள்ளார் என்ற செய்தி , சில மாதங்களாக உலா வந்துக்கொண்டிருந்த நிலையில் , சமீபத்துல் இந்த கூட்டணி இணைவது உறுதியானது.

பாலா, சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை!
பாலா - சூர்யா கூட்டணியில் வெளியான 'நந்தா', 'பிதாமகன்' உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சூர்யாவின் திரையுலக பயணத்தை நந்தாவிற்கு முன், நந்தாவிற்கு பின் என பிரிக்கலாம். அந்த அளவுக்கு சூர்யாவின் சினிமா கெரியரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம் நந்தா. அதன் காரணமாத்தானோ என்னவோ சூர்யா , இயக்குநர் பாலா மீது மிகுந்த மரியாதையுடன் நடந்துக்கொள்வாராம். பாலா இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் நாச்சியார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகா மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டை பெற்றார். இயக்குநர் பாலா நடிகர் , நடிகைகளை கதைக்கு ஏற்ற மாதிரியாக நடிக்க வைப்பதில் கில்லாடி.

பாலா, சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை!
சூர்யா தயாரிப்பில் பாலா இயக்கும் புதிய படத்தின்  ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைப்பெற்று வரும் சூழலில், படத்தில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கதாநாயகனாக நடிகர் அதர்வா முரளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலா இயக்கத்தில் அதர்வா, பரதேசி என்னும் படத்தில் நடித்திருந்தார்.‘எரியும் பனிக்காடு’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில்  வேதிகா, ரித்விகா என பல நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் எட்டு வருடங்களுக்குப் பிறகு அதர்வா முரளியும் பாலாவும் மீண்டும் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கின்றனர். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது அடுத்தடுத்த முக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகளை தேர்வு செய்யும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. பாலா , சூர்யா கூட்டணியின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடிப்பார் என கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget