விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா பதிவிட்ட புகைப்படங்கள்.... மீண்டும் கிசுகிசுக்கும் நெட்டிசன்கள்...
விஜய் தேவரகொண்டா புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கிசுகிசுத்து வருகின்றனர். அதற்கு என்ன காரணம் தெரியுமா?
சில நாட்களுக்கு முன்பு, நடிகர் விஜய் தேவரகொண்டா தன் விடுமுறை கொண்டாட்டத்தில் எடுத்துக்கொண்ட ஒரு அழகான படத்தை வெளியிட்டார். அந்த படத்தில் அவர் சாப்பிட்டு முடித்து வைத்திருந்த தட்டு ஒன்று இருந்தது. விஜய் தேவரகொண்டா முகத்தில் உற்சாகம் வெட்கம் ஆகியவை கலந்த சிரிப்பு காணப்பட்டது. இதனால் அவர் ராஷ்மிகா மந்தனாவுடன் விடுமுறையில் இருக்கிறார் என்று ரசிகர்கள் மீண்டும் யூகிக்க தொடங்கி விட்டனர்.
View this post on Instagram
விஜய தேவரகொண்டாவின் இந்த உற்சாகாத்திற்கு ராஷ்மிகா காரணமா? என்றும், சில நாட்களில், ராஷ்மிகா தனது விடுமுறையிலிருந்து சில படங்களை வெளியிடுவார் என்று விளையாட்டாக சில ரசிகர்கள் கருத்து பதிவிட்டனர். மேலும் ராஷ்மிகா தான் விடுமுறையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அந்த புகைப்படத்தில் சாதாரண உடை மற்றும் தொப்பி அணிந்து க்யூட் ஆக போஸ் கொடுத்துள்ளார் ராஷ்மிகா. இந்த புகைப்படங்களை யார் எடுத்திருப்பார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தைத் தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவும் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக வதந்திகளை பரப்புவதாக ராஷ்மிகா மந்தனா சமூக வலை தளத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என இரண்டு படங்களிலும் நடித்துள்ளனர். இந்த திரைப்படங்கள் பெரிய வசூலை குவித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஷ்மிகா மந்தனா தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் அவர் க்யூட் ரியாக்ஷன்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தெலுங்கு திரையுலகை தாண்டி இருவருக்கும் தமிழ், இந்தி உள்ளிட்ட திரையுலகிலும் பெரிய வரவேற்பு கிடைத்தது. இவர்கள் இருவருமே அதிக ரசிகர்களை கொண்ட புகழ் பெற்ற நடிகர்களாக திகழ்ந்து வரும் நிலையில் இவர்களை பற்றி அடிக்கடி சமூக வலைதளங்களில் வதந்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.