மேலும் அறிய

Watch video : ’நட்புதான் சொத்து நமக்கு’ மீளாத்துயரில் இருந்து மீளும் மீனா.. கொண்டாடும் நண்பர்கள்..

கணவரின் இழப்பால் மனமுடைந்து முடங்கி இருந்த நடிகை மீனா சமீபகாலமாக சகஜ நிலைக்கு திரும்புகிறார். தோழி சங்கவியுடன் நடனமாடிய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகிறது

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். 

Watch video : ’நட்புதான் சொத்து நமக்கு’ மீளாத்துயரில் இருந்து மீளும் மீனா.. கொண்டாடும் நண்பர்கள்..

இதனிடையே நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி உயிரிழந்தார்.  அவரது மரணம் திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வெளியே தலை காட்டாமல் இருந்த நடிகை மீனாவுக்கு ஆறுதலாக இருந்தனர் அவரது நண்பர் வட்டம்.  

இரண்டாவது திருமணம் எனும் வதந்தி :

சமீபத்தில் நடிகை மீனாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தார் வற்புறுத்தியதாக தகவல் பரிமாறப்பட்டது. அதற்கு மீனா இந்த வதந்திகளை உண்மையல்ல என்பதை தெளிவுபடுத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த துயரத்தில் இருந்து மீண்ட மீனா இப்போது தான் சகஜ வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meena Sagar (@meenasagar16)

வைரலாகும் சங்கவி - மீனா நடனம் :

அதன் வெளிப்பாடாக மீனா தனது தோழியான நடிகை சங்கவியுடன் "மாலை டம் டம்..." பாடலுக்கு இணைந்து நளினமாக நடனமாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்றைய ட்ரெண்டுடன் பயணிக்கிறேன் என கேப்ஷன் வைத்துள்ளார். நடிகர் விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தவர் நடிகை சங்கவி. சமீபத்தில் மீனாவை நேரில் சென்று சந்தித்துள்ளார் நடிகை சங்கவி. தோழிகள் இருவரும் ஒன்றாக சேர்ந்த இந்த தருணத்தில் ஆடல் பாடலுடன் கொண்டாடியுள்ளனர். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த திரை ரசிகர்கள் சகஜ நிலைக்கு திரும்பும் மீனாவை பார்த்து சந்தோஷம் அடைந்துள்ளனர். சமீபத்தில் விளம்பரம் ஒன்றிலும் நடிகை மீனா நடிக்க இருப்பதாக தகவல்கள் பகிரப்பட்டன. 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget