மேலும் அறிய

Vanitha Vijayakumar: 'தமிழ் சினிமாவின் ஷாருக்கான் இவர்தான்' - நடிகை வனிதா விஜயகுமார் சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலனின் அடுத்தப் படைப்பாக ‘அநீதி’ படம் தயாராகி உள்ளது.

அநீதி படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை அந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலனின் அடுத்தப் படைப்பாக ‘அநீதி’ படம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஜூலை 21 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதனிடையே அநீதி படக்குழுவினர் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், நான் என்னுடைய கம்பேக்கில் நிறைய படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். ஆனால் அநீதி படம் முதல் படமாக உலகளவில் ரிலீஸ் ஆகுது. இவ்வளவு பெரிய இயக்குநர் எனக்கு போன் செய்து, ‘நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன். கதை எழுதும் போதும் இந்த கேரக்டரை நீங்க பண்ணா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சி’ என சொன்னார். உடனே நான் சரி என சொன்னேன். இப்படி எளிமையாக ஒரு பிரபலத்தோட பேசுற இயக்குநர் ஒரு சிலர் தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். 

Vanitha Vijayakumar: 'தமிழ் சினிமாவின் ஷாருக்கான் இவர்தான்' - நடிகை வனிதா விஜயகுமார் சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம் கூட இல்லை. அத்தனை எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார்.அர்ஜூன் தாஸூக்கே நான் வில்லன்  என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் க்யூட்டெஸ்ட் பெர்சன். அவரோட வாய்ஸ் அழகாக உள்ளது.

கிளைமேக்ஸ் காட்சியை பார்த்து விட்டு, எனக்கு ஓ மை காட் .. எனக்கு ஷாரூக்கான் நியாபகம் தான் வந்தது. அர்ஜூன் தாஸ் தமிழ் சினிமாவின் ஷாரூக்கான்.   மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை. 'அநீதி' படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள். துஷரா  விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். 'அநீதி' திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
அப்பா விஜயைப் பற்றி ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோ வைரல்...தந்தை மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி!
அப்பா விஜயைப் பற்றி ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோ வைரல்...தந்தை மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி!
பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
2.85 லட்சம் ரூபாய்தான் பட்ஜெட்! 473 கி.மீட்டர் மைலேஜ் தரும் Harley-Davidson X440 பைக் வாங்கலாமா?
2.85 லட்சம் ரூபாய்தான் பட்ஜெட்! 473 கி.மீட்டர் மைலேஜ் தரும் Harley-Davidson X440 பைக் வாங்கலாமா?
277 கி.மீட்டர் மைலேஜ்.. அசத்தலான ரைட் செல்ல Vespa Officina 8 ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
277 கி.மீட்டர் மைலேஜ்.. அசத்தலான ரைட் செல்ல Vespa Officina 8 ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
OLA, TVS-க்கு டஃப் கொடுக்கும் புது வரவு! இந்தியர்களின் மனதை வென்ற 'ரிவர் இன்டீ' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விற்பனையில் அசுர வளர்ச்சி!
OLA, TVS-க்கு டஃப் கொடுக்கும் புது வரவு! இந்தியர்களின் மனதை வென்ற 'ரிவர் இன்டீ' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விற்பனையில் அசுர வளர்ச்சி!
Aadi Month 2026: ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
Embed widget