Tamannaah Bhatia: நடிகை தமன்னாவுக்கு Love Affair இருக்கா!.. அதுவும் அந்த மாதிரி டேஸ்ட் சொல்றாங்க!
நடிகை தமன்னாவிற்கு love Affair இருப்பதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும தமன்னா, தமிழை தாண்டி இந்தி மொழியிலும் பல ஹிட் படங்களிலும் நடித்து வருகிறார். அதையும் தாண்டி சன்னி லியோன் நடிப்பில் வெளியான ராகினி எம்எம்எஸ் 2 படத்தின் சீரிஸ் 3ஆம் பாகத்திலும் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2ஆம் பாகத்தில் ஏகபோகத்திற்கு கவர்ச்சியான காட்சிகளும் இடம்பிடித்திருந்தது சர்ச்சையானது. ஆபாச பட நடிகையை வைத்து மக்களை மயக்குகிறார்கள் என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் தமன்னா நடிக்க இருப்பதால் ரசிகர்களின் மனதிலும் அதே எண்ணம் தான் தோன்றியுள்ளது. ஏற்கனவே ஒரு பாட்டிற்கு மட்டும் கவர்ச்சி காட்டி வரும் தமன்னா, படம் முழுக்க நடித்தாலும் ஆச்சர்யமில்லை என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு Love Affair இருப்பதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணத்தையும் அவரே தெரிவித்துள்ளார்.
Love Affair குறித்து பேசிய நடிகை தமன்னா, எனக்கு சிறு வயதில் இருந்தே சமோசா என்றால் ரொம்ப பிடிக்கும். அதுவும் டீ, காபி சாப்பிடும் போது சமாேசாவை சேர்த்து சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும். ஒரே நேரத்தில் 5 சமோசா வரை சாப்பிடுவேன். எனக்கு உருளைக்கிழங்கில் செய்த சமோசாவைத்தான் பிடிக்கும். பன்னீர் போன்ற பொருளால் செய்த சமோசாவை விரும்பி கூட சாப்பிட மாட்டேன். தியேட்டரில் விற்கும் ஏ1 சமோசாவை அதிகமாக சாப்பிட்டிருக்கிறேன். அது மாதிரி டேஸ்ட் எங்கேயும் இருக்காது. அதனால் தான் எனக்கு சமோசா மீது Love Affair இருக்கிறது என தமன்னா தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவரது காதலர் விஜய் வர்மாவை பிரேக் அப் செய்தது தொடர்பாகவும், வேறு நடிகையுடன் ஊர் சுற்றுவது குறித்த கேள்விக்கு, யார் யாருடன் ஊர் சுற்றினால் எனக்கு என்ன? எனக்கு நிறைய வேலை இருக்கிறது என தமன்னா பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





















