மைசூர் சாண்டல் சோப் விளம்பரத் தூதராக தமன்னா..கர்நாடக அரசை கிழிக்கும் மக்கள்...இத்தனை கோடி சம்பளமா
மைசூர் சாண்டல் சோப் மற்றும் கர்நாடக அரசால் தயாரிக்கப்படும் பிற பொருட்களுக்கு நடிகை தமன்னா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளதிற்கு மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்

மைசூர் சாண்ட் சோப் விளம்பர தூதராக தமன்னா
கர்னாடக சோப் மற்றும் டிடர்ஜெண்ட் லிமிடட் நடிகை தமன்னாவை இரண்டு ஆண்டுகளுக்கு விளம்பர தூதராக நியமித்துள்ளது. 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மைசூர் சாண்டல் சோப் உட்பட பிற பொருட்களுக்கு தமன்னா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக ரூ 6.2 கோடி அவருக்கும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
We're thrilled to welcome the iconic Ms Tamannaah Bhatia (@tamannaahspeaks) as the brand ambassador for Mysore Sandal Soap! A symbol of grace and versatility, Tamannaah perfectly mirrors the legacy, purity, and timeless appeal of our heritage brand
— House Of Mysore Sandal (@MysoreSandalIn) May 22, 2025
.
.#Ksdl #BrandAmbassador pic.twitter.com/TQe2tjeY4O
தமன்னாவுக்கு மக்கள் எதிர்ப்பு
தமன்னாவை விளம்பர தூரதராக நியமித்துள்ள இந்த முடிவிற்கு கர்னாடக மக்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கன்னட திரைப்பட இயக்குநர் கவிதா லங்கேஷ் இப்படி கூறினார் " எத்தனையோ திறமையான கன்னட நடிகைகள் இருக்கும்போது ஏன் தமன்னாவை விளம்பர தூதராக நியமிக்க வேண்டும். அரசின் விளம்பரத்திற்காக சம்பளமே இல்லாமல் கன்னட நடிகைகள் இதை செய்வார்கள்."
கர்னாடகா ரக்ஷனா வேதிகே அமைப்பின் தலைமை நிர்வாகி டி நாராயணா கெளடா தமன்னாவை நியமித்தது ஒரு அவமானம் என்றும் இந்த முடிவை மாற்றவில்லை என்றால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று கூறியுள்ளார்
கர்னாடக அரசு தரப்பில் விளக்கம்
"உலகளவில் கர்னாடக சோப் மற்றும் டிஜர்ஜெண்ட் மூலமாக ரூ 1800 கோடி வருமாணம் வருகிறது. இதில் 12 சதவீதம் மட்டுமே கர்னாடக மாநிலத்தில் இருந்து வருகிறது. இதனால் எங்கள் பிராண்டை சர்வதேச அளவில் கொண்டு செல்ல பான் இந்தியளவில் பிரபலமான நடிகை ஒரு தேவைப்பட்டதால் தமன்னாவை விளம்பர தூதராக நியமித்துள்ளோம் என விளக்கமளித்துள்ளார்
2023 - 2024 ஆம் ஆண்டு ஆண்டில் கே.எஸ்.டி.எல் பொருட்கள் ரூ 1570 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ 362 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது. முன்னதாக கிரிக்கெட் வீரர் தோனியுடன் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியது கே.எஸ்.டி.எல். தற்போது தமன்னாவை விளம்பர தூதராக நியமித்தது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளது கே.எஸ்.டி,.எல்




















