Watch Video: நடந்துபோன சன்னி லியோனை தள்ளிவிட்ட நபர்... செருப்பை எறிந்து வெறுப்பை கக்கிய சன்னி!
பாலிவுட் பக்கம் தலைகாட்டி வரும் சன்னி லியோனுக்கு இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் பல கோடி பேர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
கனடாவிற்கு குடியேறிய ஒரு இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவர் சன்னி லியோன் என்கின்ற கரம்ஜித் கவுர். சன்னி லியோன் என்ற அந்த பெயர் உலகம் முழுக்க பிரபலம். அந்த பெயரை சொன்னாலே அடெல்ட் கண்டெண்ட் பேசாதே என்பார்கள் நண்பர்கள் வட்டம்! ஆனால் திசை மாறி போன தனது கடந்த கால வாழ்க்கையை மறைக்க , மறக்க போராடும் ஒரு பாசிடிவ் வைப்தான் சன்னி லியோன். சமுதாய நற்பணிகள் , குழந்தை தத்தெடுத்து வளர்ப்பு , வெளிப்படையான பேச்சு என சன்னி லியோனின் கடந்த 10 ஆண்டுகால பயணம் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆம்..என்னுடைய கடந்த காலம் தவறாகத்தான் இருந்தது. அதிலிருந்து மீள எனக்கு உதவியாக இருங்களேன் என அவர் விடும் கோரிக்கைகள் பலரின் அன்பிற்கு பாலமாக அமைந்திருக்கிறது.
தற்போது சன்னி தன்னை ஒரு வழக்கமான நடிகையாக அடையாளப்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கிறார். பாலிவுட் பக்கம் அவ்வபோது தலைக்காட்டும் சன்னி, தனது வாழ்க்கை படத்திலேயே நடித்திருந்தார். தற்போது கோலிவுட் பக்கமும் எண்ட்ரி கொடுக்கவுள்ளார். தொடர்ந்து, பாலிவுட் பக்கம் தலைகாட்டி வரும் சன்னி லியோனுக்கு இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் பல கோடி பேர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
View this post on Instagram
எப்பொழுது, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், அவ்வபோது தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார். அந்த வரிசையில் நீச்சல் குளம் அருகில் நடந்து வரும் சன்னி லியோனை அவருடைய நண்பர் நீரில் தள்ளி விடுகிறார். இதனால் முழுவதும் நனைந்துபோன சன்னி, தள்ளிவிட்ட தன் நண்பரை செருப்பை தூக்கி எறிந்து க்யூட்டாக அடிக்கிறார். தற்போது ஒரு வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்