மேலும் அறிய

Shriya Saran: “தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா?” .. வைரலாகும் ஸ்ரேயா போட்டோ!

Shriya Saran: 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் என்ற படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரேயா. தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு துஜே மேரி கசம் என்ற படம் மூலம் பாலிவுட்டில் என்று கொடுத்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சினிமாவில் அறிமுகம் 

2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் என்ற படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரேயா. தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு துஜே மேரி கசம் என்ற படம் மூலம் பாலிவுட்டில் என்று கொடுத்தார். இரு மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை பெற்ற சுவையாக எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா. இந்த படத்தில் திரிஷா முதன்மை கதாநாயகியாக நடிக்க ஸ்ரேயா இரண்டாவது ஹீரோயினாக நடித்திருப்பார். 

தமிழில் எண்ட்ரீ

ஆனால் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா 2005 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த மழை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம் பெற்ற மழை பாடல் அவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. இதன் பின்னர் இரண்டாவது  படமான திருவிளையாடல் ஆரம்பத்தில் நடிகர் தனுசுடன் ஜோடி சேர்ந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் ஸ்ரேயாவின் வளர்ச்சி நிஜமாகவே யாரும் எதிர்பாராதது. 

ஆம், மூன்றாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடி,  இயக்குனர் ஷங்கர் படத்தின் ஹீரோயின் என சிவாஜி படத்தில் நடித்தார். இந்தப் படம் ஸ்ரேயாவின் கேரியரை திருப்பி போட்டது.  பின்னர் விஜய்க்கு ஜோடியாக அழகிய தமிழ் மகன், விஷால் ஜோடியாக தோரணை, விக்ரம் ஜோடியாக கந்தசாமி, மீண்டும் தனுஷ் ஜோடியாக குட்டி, சரத்குமாருடன் ஜக்குபாய், ஜீவாவுடன் ரௌத்திரம், ஆர்யாவுடன் சிக்கு புக்கு, சிம்புவுடன் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என தமிழ் சினிமாவின் முன்னணி முதல் இளம் ஹீரோக்கள் வரை அனைவருக்கும் ஜோடியாக நடித்தார். 

சறுக்கிய கேரியர்

ஆனால் நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரேயா நடனமாடியிருந்தார். இதுவே அவரது கேரியரை தலைகீழாக திருப்ப காரணமாக மாறியது. அதன் பின்னர் ஸ்ரேயாவுக்கு தமிழில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு தமிழில் நடித்த ஸ்ரேயா அதன் பின்னர் தமிழ் சினிமா பக்கம் வரவே இல்லை. 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயாவுக்கு ஒரு குழந்தை உள்ளது. 

வைரலாகும் புகைப்படம் 

தற்போது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளில் நடித்து வரும் ஸ்ரேயா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் தங்க நிற ஆடையில் கண்ணாடியில் தன்னுடைய பிம்பம் தெரிவது போன்ற தன்னுடைய பிம்பம் தெரிவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்தப் படங்களை பார்த்த இணையவாசிகள் 41 வயதிலும் ஸ்ரேயா பார்ப்பதற்கு இளம் பெண்ணாகவே காட்சியளிப்பதாக சிலாகித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget