மேலும் அறிய

"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா

இயக்குனர் பாண்டியராஜனுக்கும், அவரது குடும்பத்திற்கும் தான் என்றுமே நன்றிக்கடன்பட்டுள்ளதாக நடிகை சீதா தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் 85,90  காலகட்டங்களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சீதா. 1985ம் ஆண்டு அறிமுகமான ஆண் பாவம் என்ற படம் மூலமாக நடிகையாக அறிமுகமான அவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, ராம்கி, பார்த்திபன் என அப்போதைய முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார். 

பாண்டியராஜன்தான் காரணம்:

இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, முதல் படம் பாண்டியராஜனுடன் பண்ணேன். அதன்பின்பு, 4, 5 வருடங்களில் திருமணமாகிவிட்டது. ஒரு பிரச்சினை வந்து நான் வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் எங்க இயக்குனர் மீது எனக்கு பயங்கர மரியாதை வந்தது. ஏனென்றால், அந்த ஒரு தொழில்தான் எனக்குத் தெரிந்த தொழில். என்னைக் காப்பாற்றிய தொழில்.

என்னைக் கைகொடுத்து தூக்கியது இதெல்லாம் நான் 2வது முறையாக நடிக்கத் தொடங்கிய பிறகுதான் வந்தது. இன்று நான் சாப்பாடு சாப்பிடுவதற்கு காரணம் எனது இயக்குனர் பாண்டியராஜனே ஆவார். அன்று அவர் என்னைக் கொண்டு வந்ததுதான். நான் பெரியதாக ஏதும் படிக்கவில்லை. நான் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். இதனால், என்றுமே நான் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நன்றியுடன் இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆண்பாவம்:

நடிகை சீதா பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் படத்தில் அறிமுகமானார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. பாண்டியராஜன் நடிகராகவும், இயக்குனராகவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அந்த படத்தில் நடிகர் பாண்டியன், ரேவதி, விகே ராமசாமி என பெரிய பட்டாளமே நடித்திருப்பார்கள்.

இந்த படத்திற்கு பிறகு ஆயிரம் பூக்கள் மலரட்டும், சங்கர் குரு, குரு சிஷ்யன், உன்னால் முடியும் தம்பி, புதிய பாதை, ராஜநடை, ஆடி வெள்ளி, மருதுபாண்டி என பல படங்களில் நடித்தார். புதிய பாதை படத்தின்போது பார்த்திபனுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி அவரை  திருமணம் செய்து கொண்டார்.

குணச்சித்திர வேடத்தில் அசத்தல்:

1992ம் ஆண்டுக்கு பிறகு 2002ம் ஆண்டு மீண்டும் குணச்சித்திர வேடத்தில் நடிக்கத் தொடங்கினார். அதன்பின்பு, விஜய், அஜித், ஜெயம் ரவி, எஸ்ஜே சூர்யா, பரத், பிரசாந்த் என பலருடன் இணைந்து நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
Embed widget