மேலும் அறிய

Sanam Shetty: விஜய்க்கு கூடிய கூட்டம்.. சனம் ஷெட்டி போட்ட பதிவு.. ஏடாகூடமாக கமெண்ட் செய்த ரசிகர்!

நடிகை சனம் ஷெட்டி தனது எக்ஸ் வலைத்தள பதிவில் விஜய்க்கு கூடிய கூட்டத்தின் போட்டோவை பதிவிட்டு இது போன்ற ஒரு கூட்டத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

தவெக தலைவர் விஜய்க்கு தென் மாவட்டத்தில் கிடைத்த வரவேற்பு தொடர்பாக நடிகை சனம் ஷெட்டி போட்ட பதிவுக்கு இணையவாசி ஒருவர் ஏடாகூடமாக கமெண்ட் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது. 

விஜய்க்கு கிடைத்த வரவேற்பு

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக களமிறங்கியுள்ளது. நடிகராக தமிழ்நாட்டு மக்களின் பேராதரவை பெற்ற விஜய்க்கு அரசியலிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அவர் செல்லும் இடங்களில் எல்லாம் திரளாக சிறியவர் முதல் பெரியவர் வரை மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்த வகையில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக விஜய் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தார். 

இதில் திருநெல்வேலி மாவட்டம் புறநகர் பகுதியான கேடிசி நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட விஜய் பின்னர் அங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிற்கு ரோடு ஷோ சென்றார். செல்லும் வழி எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி சென்ற விஜய் அங்கு ரோடு ஷோ மட்டுமே சென்றார். ஆனால் சித்திரை திருவிழா கூட்டத்தை போல கூடியிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு அவர் ஒரு கணம் கண்கலங்கி விட்டார்.

அந்த அளவுக்கு விஜயை காண்பதற்கு பெரும் திரளாக மக்கள் கூடியிருந்தனர். இதுதொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. உண்மையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது என இணையவாசிகள்  ஆச்சரியப்பட்டுள்ளனர். 

சனம் பதிவு.. ரசிகரின் கமெண்ட்

இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது எக்ஸ் வலைத்தள பதிவில் விஜய்க்கு கூடிய கூட்டத்தின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இது போன்ற ஒரு கூட்டத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ரசிகர்கள், இணையவாசிகள் என பலரும் கமெண்ட் செய்தனர். அந்த வகையில் ஒருவர் நீங்கள் கவர்ச்சியாக ஆடை அணிந்து வந்தால் விஜயை விட அதிக கூட்டம் கூடும் என தெரிவித்துள்ளார். இதனை கண்டு கடுப்பான சனம், ‘யோவ்’ என திட்டி பதிவிட்டிருந்தார்.

அதே சமயம் விஜய்யின் தீவிர ஆதரவாளராக இருந்த சனம் செட்டி சமீபத்திய விஜயின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். இந்த நிலையில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை பார்த்து அவர் ஆச்சரியப்பட்டு நெகிழ்ச்சியுடன் பதிவு வெளியிட்ட நிலையில், இப்போது மட்டும் நீங்கள் ஏன் சப்போர்ட் செய்கிறீர்கள் என தவெக தரப்பும் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget