Samantha: ஈஷா யோகா மையத்தில் தியான நிலையில் சமந்தா... வைரலாகும் புகைப்படங்கள்!
தனது ஆன்மீகப் பயணத்தின் அடுத்த கட்டமாக ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார் நடிகரை சமந்தா.
தனது ஆன்மீக பயணத்தின் அடுத்தக்கட்டமாக ஈஷா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார் நடிகை சமந்தா. தான் தியானம் செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
சினிமாவில் இருந்து பிரேக்
மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து சிகிச்சைப் பெற்று வந்தார் சமந்தா. கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். சீட்டடெல் என்ற இணையத் தொடரில் நடித்து வந்தார். இந்தத் தொடரின் படபிடிப்பை சமந்தா சமீபத்தில் முடித்தார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாக தகவல் வெளியானது. இதனால் அவரின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில் சமந்தா என்ன செய்யப் போகிறார் என தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் தனது மனதை சாந்தப்படுத்த ஒரு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார் சமந்தா.
மனதை குணப்படுத்த ஆன்மீகச் சுற்றுலா
விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீசுடன் வேலூர் தங்கக் கோயிலுக்கு அண்மையில் சென்று வந்தார் சமந்தா. இது தொடர்பான புகைப்படங்கள் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் ஜெகதீஷ் உடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் சமந்தா பதிவு செய்தார்.
தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கையால் அபிஷேகம் செய்தும், தீபாராதனையும் செய்த பிறகு கோயிலைச் சுற்றியும் வந்துள்ளார். ஆசி பெற்ற சமந்தாவுக்கு அவருக்கு சக்தி அம்மா பிரசாதத்தை வழங்கியுள்ளார். வேலூர் பொற்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சமந்தாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஈஷாவில் தியானம்
View this post on Instagram
இந்நிலையில், தனது ஆன்மீகப் பயணத்தின் அடுத்தக்கட்டமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார் சமந்தா. அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்து தொடர்ச்சியான தியானப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தான் தியானம் செய்யும் புகைப்படங்களை இணையதளத்திலும் பகிர்ந்து “ எந்த விதமான குழப்பங்களும் இல்லாமல் இப்படி அமைதியான ஒரு மனநிலையில் இருக்க முடியும் என்பது எனக்கு இங்கு வந்த பிறகுதான் புரிந்தது” எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த ஆன்மீகப் பயணத்தில் அடுத்து எங்கு செல்ல இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.