மேலும் அறிய

Samantha Ruth on Twitter: “சமந்தா ஒரு செகண்ட் ஹேண்ட் ஐட்டம்” - ட்விட்டர்வாசியின் கருத்துக்கு சமந்தா கொடுத்த பதிலடி..

நடிகை சமந்தாவை பாழடைந்த செகண்ட் ஹேண்ட் ஐட்டம் எனக்கூறிய ட்விட்டர்வாசிக்கு சமந்தா ட்விட்டரில் பதிலளித்துள்ளார். 

நடிகை சமந்தாவை பாழடைந்த செகண்ட் ஹேண்ட் ஐட்டம் எனக்கூறிய ட்விட்டர்வாசிக்கு சமந்தா ட்விட்டரில் பதிலளித்துள்ளார். 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா ‘தி ரைஸ்’ . இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் அல்லு அர்ஜூனின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக படத்தின்  ‘oo antava mama ' பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் சமந்தா படு கிளாமராக நடனமாடியிருக்கிறார் என்பதாலும் பாடல் அதிகம் கவனிக்கப்பட்டது. ஆண்களை வக்கிரம் உள்ளவர்களாக சித்தரிக்கும் பாடலை நீக்காவிட்டால் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்கு தொடர்வோம் என்றது ஆந்திர ஆண்கள் அமைப்பு. இந்நிலையில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்து படத்தின் நாயகன் அல்லு அர்ஜூனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாடலின் வரிகள் உண்மைதானே..உண்மையைத்தான் எழுதியிருக்கிறார்கள் என்றார் சிரித்தப்படி. என்னதான் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், இன்று சமந்தாவின்  நடனம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Samantha Ruth on Twitter: “சமந்தா ஒரு செகண்ட் ஹேண்ட் ஐட்டம்” - ட்விட்டர்வாசியின் கருத்துக்கு சமந்தா கொடுத்த பதிலடி..

பாடல் குறித்தான சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் விதமாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். . அதில் “நான் நன்றாக நடித்தேன்.... மோசமாகவும் நடித்திருக்கிறேன். நான் ஜாலியாகவும் நடித்திருக்கிறேன். சீரியஸாகவும் நடித்திருக்கிறேன். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தேன். நான் எடுக்கும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். அந்த வகையில் கவர்ச்சியாக இருப்பது அடுத்த கட்ட கடினமான வேலை.

#ooantavaooooantava அன்புக்கு நன்றி” என தனது பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது புஷ்பா படத்தின் ooo anthava பாடல் யூடியூப் பக்கத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனிடையே 4 வருட காதல் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் சமந்தா. இதற்கு சமந்தா திரைப்படங்களில் படு கிளாமராக நடிப்பதே காரணம் என்றும் கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து சமந்தாவின் ஊ அண்டாவா பாடலுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் ஆண்கள் தரப்பில் பாடுவது போன்ற பாடல் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இப்பாடல் யூடியூபில் 4.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. பெண்களுக்கோ ஆண்களுக்கோ கலை கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படக்கூடாது எனவும் கூறி சமூக வலைதளங்களில் இப்பாடல் பரப்பப்பட்டு வருகிறது. 

இதற்கு ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்த ட்விட்டர்வாசி ஒருவர், “சமந்தா ஒரு விவாகரத்து செய்யப்பட்ட பாழடைந்த செகண்ட் ஹேண்ட் ஐட்டம். அவர் ஒரு ஜென்டில்மேனிடம் இருந்து 50 கோடி பணத்தை கொள்ளையடித்துள்ளார்” எனத் தெரிவித்திருந்தார். இதில் சமந்தாவையும் டேக் செய்திருந்தார். 

இதற்கு தனது ட்விட்டரில் பதிலளித்த நடிகை சமந்தா “கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசீர்வதிப்பாராக” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Embed widget