Thalaivar 170: ரஜினிகாந்த் பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து.. காயமடைந்த நடிகை ரித்திகா சிங்!
Rithika Singh: ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ரித்திகா சிங்குக்கு காயமடைந்துள்ளது.
தலைவர் 170
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது (Thalaivar 170) படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய த. செ.ஞானவேல் இப்படத்தை இயக்க அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
படப்பிடிப்பின் போது காயம்
தலைவர் 170 படத்தில் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இறுதிச்சுற்று படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங் (Rithika Singh) முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். முன்னதாக ரஜினியுடன் நடிக்கும் தன்னுடைய மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அவர்.
Damn! I'm not even able to see through my tears right now.
— Ritika Singh (@ritika_offl) October 2, 2023
An opportunity to share the screen with Rajni Sir and the entire stellar cast and crew of #Thalaivar170 is straight out of my dreams and I'm immensely grateful for this opportunity!
What a momenttt!!!!@rajinikanth… pic.twitter.com/pSTtW3D3so
தற்போது தலைவர் 170 படத்தின் சண்டைக் காட்சி ஒன்றில் படப்பிடிப்பின்போது ரித்திகா சிங்குக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்றை தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். கைகளை எக்கசக்கமான சிராய்ப்புகளும் காயங்களுடனுமான அவரது புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன.
மேலும் இந்த வீடியோவில் ரித்திகா சிங் “நான் ஏதோ ஓநாயுடன் சண்டைப் போட்டது போல் இருக்கின்றன இந்த காயங்கள். என்னிடம் பலமுறை கண்ணாடி இருக்கிறது பத்திரமாக இருங்கள் என்று எச்சரித்தார்கள். சில நேரங்களில் உங்களது வேகத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாது, என்னுடைய கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்து இது. இப்போது சிகிச்சைக்காக செட்டிலிருந்து மருத்துவமனை செல்கிறேன். வலியில்லை.. ஆனால் காயம் பலமாக இருப்பதால் பின் வலிக்குமோ என்று பயப்படுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார் விரைவில இந்த காயங்களில் இருந்து அவர் மீண்டு வந்து படப்பிடிப்பை தொடர்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
#Rajinikanth's upcoming film #Thalaivar170 shooting is currently going on at a brisk pace. Unfortunately #RitikaSingh got injured on the set during the filming of a high-octane fight scene. Get well soon @ritika_offl 💐💐💐@rajinikanth @tjgnan @anirudhofficial @LycaProductions pic.twitter.com/jM7vvjGUJX
— Udayakumar (@Udaya_rks) December 5, 2023