மேலும் அறிய

HBD Rambha : ரசிகர்களின் உள்ளத்தை அள்ளிய ரம்பா.. ஹேப்பி பர்த்டே டார்லிங் ஸ்டார்..

தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ரம்பாவின் பிறந்தநாள் இன்று

சிரிப்பழகி, கண்ணழகி, இடுப்பழகி இப்படி நடிகைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் வர்ணித்து கொண்டாடி வந்த நிலையில் ஒரு புயலாக 'ஐ லவ் யூ லவ் யூ சொன்னாளே... உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாலே...' என ரசிகர்களின் நெஞ்சங்களை எல்லாம் தூண்டில் போட்டு சிறையில் வைத்தவர் அழகி ரம்பா. இந்த அழகு பெட்டகத்தின் 47-வது பிறந்தநாள் இன்று. 

HBD Rambha : ரசிகர்களின் உள்ளத்தை அள்ளிய ரம்பா.. ஹேப்பி பர்த்டே டார்லிங் ஸ்டார்..


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்த விஜி முதலில் வெள்ளித்திரையில் அறிமுகமானது ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கத்தில் 1993ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஆ ஒக்கட்டி அடக்கு' திரைப்படத்தில். மலையாளத்தில் 'சக்ரம்' படத்திலும் தமிழில் 'உழவன்' படத்திலும் அறிமுகமானார். அதற்கு பிறகு நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் புகழின் உச்சியை தொட்டார்.  

தென்னிந்திய சினிமாவின் மெர்லின் மன்றோ நடிகை ரம்பாதான். அன்றைய முன்னணி மாஸ் ஹீரோக்களான பிரபு, கார்த்திக், அப்பாஸ், விஜய், அஜித், ரஜினி, சரத்குமார், காதலா காதலா என அனைவரின் ஜோடியாகவும் நடித்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தார். ரம்பாவுக்கு மற்றுமொரு ப்ளஸ்ஸாக அமைந்தது அவரின் டான்ஸ்.

பிரபுதேவாவிற்கு இணையாக சூப்பர் பாஸ்ட் ஸ்டெப்ஸ் போடுவதில் ரம்பாவை அடித்துக்கொள்ள நடிகைகளே இல்லை. இப்படத்தில் உச்சத்தில் இருந்த ரம்பா நடித்த கடைசி திரைப்படம் 'பெண் சிங்கம்'. கலைஞர் கருணாநிதியின் கதையில் உருவான அப்படம் அவரின் நடிப்பில் வெளியான கடைசி படம். 

HBD Rambha : ரசிகர்களின் உள்ளத்தை அள்ளிய ரம்பா.. ஹேப்பி பர்த்டே டார்லிங் ஸ்டார்..


தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி  உள்ளிட்ட மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த ரம்பா த்ரீ ரோஸஸ் படத்தை தயாரித்து நடித்தார். இருப்பினும் தயாரிப்பு அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. சினிமாவில் இருந்து விலகி இலங்கை தொழிலதிபரை  மணந்து கொண்டு கனடாவில் செட்டிலாகி மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகும் இன்றும் அதே அழகுடன் தோற்றமளிக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடன  நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக இருந்ததன் மூலம் நாம் அவரை மீண்டும் காண வாய்ப்பு கிடைத்தது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா தனது கணவர் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். ஒரு காலத்தில் இம்ப்ரெஸ்ஸிவ் நடிகையாக இருந்த ரம்பா, தற்போது குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். மீண்டும் அவர் படத்தில் நடிப்பதை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஹேப்பி பர்த்டே ரம்பா!

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget