Karthika Nair: கவனம் ஈர்த்த கார்த்திகா திருமணம்.. மகளுக்கு இவ்வளவு வரதட்சணை கொடுத்தாரா ராதா?
Karthika Nair : மகள் கார்த்திகாவுக்கு எவ்வளவு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்தார் நடிகை ராதா தெரியுமா? - என்பது தான் இப்போது இணையத்தில் பேசு பொருளாக உள்ளது.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தேடலில் கிடைத்த ஒருவரான நடிகை ராதா 'அலைகள் ஓய்வதில்லை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கோபுரங்கள் சாய்வதில்லை, எங்கேயோ கேட்ட குரல், டிக் டிக் டிக், மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா என ஏராளமான வெற்றிப்படங்களை அலங்கரித்த நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகாவுக்கு கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. மகள் கார்த்திகா நாயருக்கு நடிகை ராதா எவ்வளவு வரதட்சணை கொடுத்தார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வாய்பிளக்க வைத்துள்ளது.
திருமண வாழ்க்கை :
முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வந்த ராதா அனைத்து ஸ்டார் நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார். கனவு கன்னியாக திகழ்ந்த ராதா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் துளசி நாயர் மற்றும் கார்த்திகா நாயர் இருவரும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.
கார்த்திகாவின் நிச்சயதார்த்தம்:
'கோ' திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கார்த்திகா நாயர். அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள கார்த்திகாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தந்தையின் பிசினஸை கவனித்து வந்தார். கடந்த மாதம் கார்த்திகாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
பிரமாண்டமான திருமணம் :
திருவனந்தபுரத்தில் உள்ள தனக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் மகளுக்கு திருமணத்தை பிரமாண்டமாக முடித்தார் நடிகை ராதா. ராதிகாவின் சகோதரி அம்பிகா, டோலிவுட் ஸ்டார் சிரஞ்சீவி, சுஹாசினி மணிரத்னம், ரேவதி, மேனகா சுரேஷ், ராதிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். கார்த்திகா நாயர் - ரோஹித் மேனன் திருமணத்தில் மணமகள் அணிதிருந்த புடவை, நகைகள் அனைவரையும் கவனம் ஈர்த்தது. அதை தொடர்ந்து நடிகை ராதா தனது மகளுக்கு வரதட்சணையாக எவ்வளவு கொடுத்து இருப்பார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் ஒரு பேசு பொருளாக மாறியது.
வரதட்சணை இவ்வளவா ?
சினிமாவில் நடித்த காலத்தில் பெரிய அளவில் சொத்துக்களை சேர்த்து அதை அனைத்தையும் ஸ்டார் ஹோட்டல்களில் முதலீடு செய்து மிக பெரிய கோடீஸ்வரியாக இருக்கும் நடிகை ராதா தனது மகள் கார்த்திகாவுக்கு 500 சவரன் நகை போட்டு திருமணம் செய்து வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மணமகன் ரோஹித் மேனனுக்கும் 500 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு இருக்க கூடும் என்றும் அவர் ஒரு தொழிலதிபராக இருக்க கூடும் என்றும் ஒரு தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.