மேலும் அறிய

Actress Meena: சவாலான அம்மன் வேடம்.. சாதித்து காட்டிய மீனா.. இப்படியெல்லாம் சிக்கல் வருமா?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் வெற்றிக்கரமான ஹீரோயினாக திகழ்ந்தவர் மீனா. இவர் சில படங்களில் அம்மன் வேடத்தில் நடித்தார். அதனைப் பற்றி மீனா நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

அம்மன் வேடத்தில் நடிக்கும்போது மிகப்பெரிய அளவில் சவால்களை எதிர்கொண்டதாக நடிகை மீனா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அம்மனாக நடித்த மீனா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் வெற்றிக்கரமான ஹீரோயினாக திகழ்ந்தவர் மீனா. முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்த அவர் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார். இதனிடையே மீனா  பாளையத்தம்மன், அங்காள பரமேஸ்வரி, படை வீட்டு அம்மன் உள்ளிட்ட படங்களில் அம்மன் வேடத்தில் நடித்தார். அதனைப் பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அதாவது, “பாளையத்தம்மன் படத்தில் தான் நான் அம்மன் வேடத்தில் நடித்தேன். எந்த ஒரு கேரக்டர் என்றாலும் ஏதாவது ஒரு உதாரணம் இருக்கும். ஆனால் இப்படி கடவுள் வேடத்திற்கு எதை எடுத்துக் கொள்ள முடியும். இதற்கு முன்னால் இந்த கேரக்டர்கள் செய்தவர்கள் என்ன மாதிரி செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்து அதில் என்னுடைய பாவனையும் கலந்து தான் நடிக்க வேண்டியதாக இருந்தது. பாளையத்தம்மன் படத்தில் நடிப்பு மட்டுமல்ல அந்த அம்மன் கெட்டப்பில் பச்சை, கருப்பு, மஞ்சள் கலரில் எல்லாம் மேக்கப் போட்டிருப்பேன். அதில் மிகப்பெரிய அளவில் சவால் இருந்தது. ஆனால் அது அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

அம்மன் பேசுற விதம், நடக்குற விதம், உச்சரிப்பு, சிரிப்பு என ஒவ்வொன்றும் பார்த்து கவனமாக செய்தேன். உண்மையில் அந்த நாட்கள் எல்லாம் மிகவும் அழகானது. அத்தகைய சவால்களை நான் விரும்பினேன். அப்படியான கேரக்டர்கள் செய்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்த படம் வெளியான சமயத்தில் தியேட்டரில் சாமியாடும் பெண்களின் கதையைக் கேட்டுள்ளேன். இப்போதும் கூட ஆடி மாதம் வந்துவிட்டால் அப்படத்தின் பாடல்கள் எல்லாம் ஒலிபரப்புகிறார்கள். 

இப்போது இருக்கும் அளவுக்கு டெக்னாலஜி அப்போது இல்லை. சாதாரணமாக ஒரு மேக்கப் கிடைக்கவே ரொம்ப கடினமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியும் மிக கடினமாக மேக்கப் போட்டு அது கலைந்து விடாத அளவுக்கு படாதபாடாக இருக்கும். தலையில் கிரீடம், கையில் வேல் வைத்து வைத்து டான்ஸ் ஆடுவதற்குள் ஒருவழியாகி விடும். 

ஆனால் இயக்குநர் ராம நாராயணன் அதை எளிதாக செய்து விடுவார். அவரின் செட் ரொம்ப சௌகரியமாக இருக்கும். அம்மன் படம் பண்ணும்போதெல்லாம் அசைவம் சாப்பிட மாட்டேன். தினமும் தலைக்கு குளிப்பேன் என பல விஷயங்களை பின்பற்றினேன்” என மீனா தெரிவித்துள்ளார்.   

மீனா தற்போது மலையாளத்தில் உருவான ரோஸ்லின் வெப் சீரிஸில் நடித்துள்ளார். இது வரும் பிப்ரவரி 27ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
Ali Khamenei Sons Crying Video: டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
Kia Syros EV: ஒரே சார்ஜில் 400 கி.மீ மைலேஜ்; கியாவின் மலிவான சிரோஸ் EV அறிமுக தேதி வந்துடுச்சு.? விலை என்ன.?
ஒரே சார்ஜில் 400 கி.மீ மைலேஜ்; கியாவின் மலிவான சிரோஸ் EV அறிமுக தேதி வந்துடுச்சு.? விலை என்ன.?
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
Tata Sierra EV on EMI: டாடா சியரா EV வாங்க உங்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கணும் தெரியுமா.? மாசம் EMI எவ்ளோ.? முழு விவரம்
டாடா சியரா EV வாங்க உங்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கணும் தெரியுமா.? மாசம் EMI எவ்ளோ.? முழு விவரம்
Embed widget