மேலும் அறிய

Actress Meena : வதந்திகள் முட்டாள்களால் பரப்பப்படுகிறது...திருமண வதந்திகள் குறித்து சீறிய மீனா

பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளத்தில் பரவும் வதந்திகளுக்கு நடிகை மீனா கடுமையாக பதிலளித்துள்ளார்

மீனா

’நெஞ்சங்கள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. ஆனால் இவர்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது நடிகர் ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படம். அன்று தூக்கி வைத்து கொண்டாடிய நடிகர் ரஜினிக்கே, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்பு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானவர் மீனா.

ரஜினி , கமல், அஜித் , சூர்யா என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் திரையில் தோன்றியுள்ளார். தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் கமர்ஷியல் மற்றும் எதார்த்தமான படங்களில் அசத்திய மீனா நடிப்பைத் தவிர்த்து ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்து வருகிறார். மீனாவின் மகள் நைனிகா அட்லீ  இயக்கத்தில்  விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கடந்த 2022 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார். இதனைத் தொடர்ந்து தனது மகளுடன் மீனா வசித்து வருகிறார். இப்படியான நிலையில் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகியபடியே இருந்தன. 

முட்டாள்கள் தான் வதந்திகளை பரப்புவார்கள் - சீறிய மீனா

தனது திருமணம் குறித்தான வதந்திகளுக்கு  நடிகை மீனா பலமுறை விளக்கமளித்துள்ள போதும் இந்த வதந்திகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சமூக வலைதளத்தில் உண்மையை பேசும்படியும் தன்னைப் போல் குழந்தைகளுடன் இருக்கும் நிறைய பெண்களைப் பற்றி யோசித்து பேசுங்கள் என்று அவர் முன்பு தெரிவித்திருந்தார்.  இதற்கு பின்னும் நடிகை மீனா பிரபல நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் வதந்திகளை பரப்புபவர்களை கடுமையாக திட்டியுள்ளார் நடிகை மீனா. தனது பதிவில்  “ வதந்திகள் வெறுப்பவர்களால் பரப்பப் படுகிறது. முட்டாள்களால் நம்பப் படுகிறது “ என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க : Mari Selvaraj : “நான் நாடகக்காதல் திருமணம்தான் செய்திருக்கிறேன்; ஆனால்...” - மனைவி குறித்து பேசிய மாரி செல்வராஜ்

Mari Selvaraj: என்னை சந்தேகப் படுபவர்களுக்கு இந்த படம்... வாழை குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Embed widget