மேலும் அறிய

Manju Warrier: முதலில் அஜித், இப்போ செளபின்.. பைக் பயிற்சியில் கலக்கும் மஞ்சு வாரியர்

துணிவு படப்பிடிப்பின்போது அஜித் உடன் இணைந்து நடித்தபோது  தானும் ஒரு பைக் விரும்பியாக மாறியதுடன் புது பைக் ஒன்றையும் மஞ்சு வாரியர் வாங்கினார்.

நடிகை மஞ்சு வாரியர் பிரபல நடிகர் சௌபின் ஷாஹிர் உடன் இரவு நேரங்களில் பைக் பயிற்சி எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

மலையாள சினிமாவில் தனிப்பட்ட வாழ்வு மற்றும் நடிப்பு இரண்டுக்காகவும் கொண்டாடப்பட்டு பிரபல நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். 

முன்னதாக தமிழில் நடிகர் தனுஷ் உடன் அசுரன் படத்தில் அறிமுகமான மஞ்சு வாரியர்,  அஜித்துடன் இந்த ஆண்டு பொங்கல் ரீலீசாக வெளியாகி ஹிட் அடித்த துணிவு படத்தில் நடித்து கவனமீர்த்திருந்தார்.

அஜித் ஒரு பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்த தகவல், ஆனால் துணிவு படப்பிடிப்பில் அஜித் உடன் இணைந்து நடித்தபோது தானும் ஒரு பைக் விரும்பியாக மாறியதுடன், புது பிஎம்டபிள்யு ஜி எஸ் 1250 பைக் ஒன்றையும் வாங்கி முன்னதாக தன் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பகிர்ந்திருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் மஞ்சு வாரியர் இந்த வீடியோவை பகிர்ந்த நிலையில், ஹெல்மெட் அணிந்து பைக் வாங்கி அமர்ந்து கெத்தாக பயணிக்கும் வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி ஹிட் அடித்தது.

இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் உடன் மஞ்சு வாரியர் இரவு நேரங்களில் பைக் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“நான் எதிர்கொள்ளத் தயங்கும் அச்சமான விஷயங்கள் என் எல்லைகள் ஆகின்றன. நல்ல நண்பர்களாகவும், பொறுமையான  வழிகாட்டியாகவும் எனக்கு துண நிற்பதற்கு நன்றி சௌபின் ஷாஹிர் மற்றும் பினீஷ் சந்திரா. நீங்கள் சூப்பர் கூலான நபர்கள்.

மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது சரியான ரைடிங் கியர் அணியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். இரவு நேரங்களில் நடிகர் சௌபின் ஷாஹிர் உடன் பைக் பயிற்சி மேற்கொள்ளும் மஞ்சு வாரியரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Manju Warrier: முதலில் அஜித், இப்போ செளபின்.. பைக் பயிற்சியில் கலக்கும் மஞ்சு வாரியர்

கடந்த பிப்ரவரி மாதம் தான் பைக் வாங்கிய வீடியோவைப் பகிர்ந்திருந்த மஞ்சு வாரியர், “தைரியமான சிறு படி எப்போது ஒரு நல்ல தொடக்கம். நான் ஒரு நல்ல ஓட்டுநராக மாறுவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே நான் சாலையில் எங்கேனும் தடுமாறுவதைப் பார்த்தால் தயவுசெய்து என்னிடம் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள்” என ஜாலியாக பதிவிட்டிருந்தார்.

மஞ்சு வாரியர் நடிப்பில் மலையாளத்தில் இறுதியாக ஆயிஷா, வெள்ளரிப்பட்டிணம்  ஆகிய படங்கள் வெளிவந்தன. தற்போது அம்ரிகி பண்டிட் எனும் இந்தி படத்தில் நடிகர் மாதவன் உடன் மஞ்சு வாரியர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Embed widget