மேலும் அறிய

Mamitha Baiju : சோசியல் மீடியாவுக்கு பிரேக் விட்ட மமிதா பைஜூ...என்னாச்சு தெரியுமா ?

நடிகை மமிதா பைஜூ சமூக வலைதளங்களில் இருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ள இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

மலையாள நடிகை மமிதா பைஜூ சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. சமீப காலமாக நடிகைகள் சமூக வலைதளங்களில் எதிர்கொள்ளும் மன அழுத்தம், தனியுரிமை மீறல், தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் ஆன்லைன் தொல்லைகள் குறித்து பலரும் வெளிப்படையாக பேசி வரும் நிலையில், நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி மற்றும் கயடு லோஹரைத் தொடர்ந்து மமிதா பைஜூவும் இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் மலையாள சினிமாவைத் தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் பெற்று வரும் இளம் நடிகைகளில் ஒருவர் மமிதா பைஜூ. குறிப்பாக இளம் ரசிகர்களிடையே அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து, படப்பிடிப்பு அனுபவங்கள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மமிதா பைஜூ, "சமூக வலைதளங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். விரைவில் மீண்டும் சந்திப்போம். என்னுடைய படங்கள் தொடர்பான அப்டேட்களை என்னுடைய குழுவினர் தொடர்ந்து பகிர்வார்கள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பாக நடிகை கயடு லோஹரும் சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வு எடுப்பதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து வரும் எதிர்மறை கருத்துகள், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பரவும் வதந்திகள் மற்றும் சமூக வலைதள அழுத்தங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மியும் மனநலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிக இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக நடிகைகள் மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள், ட்ரோலிங், உருவகேலிகள், தவறான தகவல் பரப்பல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்க உதவும் தளங்களாக இருந்தாலும், அதே நேரத்தில் மனநல பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடமாகவும் சமூக வலைதளங்கள் மாறிவருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே பல பிரபலங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுக்கும் முடிவை தேர்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், மமிதா பைஜூ தற்போது தமிழிலும் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் திரைப்படத்திலும், பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திலும் மமிதா பைஜூ நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
Embed widget