Karthika Nair: பாரிஸில் ஹனிமூன் கொண்டாடும் கோ பட ஹீரோயின்! வைரலாகும் புதுமண தம்பதியின் புகைப்படங்கள்!
திருமணம் ஆகி ஒருமாத காலம் ஆகும் நடிகை கார்த்திகா நாயர் தனது ஹனிமூன் சுற்றுலா புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்
கார்த்திகா நாயர்
கோ திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் நடிகை கார்த்திகா நாயர். 80களின் முன்னணி நடிகையான ராதாவின் மகளான கார்த்திகா, ஜோஷ் எனும் தெலுங்கு படத்தில் முதலில் அறிமுகமானார். ஜீவாவுடன் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இவர் நடித்த கோ திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், தொடர்ந்து தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் மகரம்ஞ்சு, தெலுங்கில் ஜோஷ், கன்னடத்தில் பிரிந்தாவனா ஆகியப் படங்களில் நடித்த கார்த்திகாவிற்கு சொல்லிக் கொள்ளும் வகையிலான எந்த வெற்றியும் அமையவில்லை.
2013 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கொடி படத்தில் நடித்தார் கார்த்திகா. இதனைத் தொடர்ந்து எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தின் நடித்தார் கார்த்திகா நாயர். இந்தப் படத்தில் குயிலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. வழக்கமான கதாநாயகிகளைப் போல் இல்லாமல் வித்தியாசமான ஒரு கதாபாத்திரமாக இது இருந்தது.
ஆனால் கோவுக்கு பிறகு இவரது வேறு படங்கள் எதுவும் பெரிதும் கவனம் ஈர்க்காத நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறையில் இருந்து விலகினார். 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து முற்றிலுமாக விலகி, தனது தந்தையின் பிஸ்னஸில் கவனம் செலுத்தி வந்தார்.
பிரபலங்கள் கலந்துகொண்ட திருமணம்
View this post on Instagram
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தன் திருமணம் பற்றிய தகவலால் கார்த்திகா மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளானார். ரோஹித் மேனன் என்பவரை கார்த்திகா திருவனந்தபுரத்தில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். சென்ற மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள ராதாவுக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இத்திருமணத்தில் ராதாவின் அக்காவான பிரபல நடிகை அம்பிகா, டோலிவுட் நடிகர் சிரஞ்சீவி, நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், ரேவதி, மேனகா சுரேஷ், ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.கார்த்திகா அணிந்திருந்த புடவை, அணிகலன்கள் என அனைத்தும் பேசுபொருளாகி சர்ச்சையையும் கிளப்பின.
View this post on Instagram
ஹனிமூன் புகைப்படங்கள்
இந்நிலையில் தங்களது திருமணம் முடிந்து ஒரு மாத காலம் நிறைவடைந்ததை அடுத்து கார்த்திகா க்யூட்டான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் கார்த்திகாவின் கணவர் தங்களது ஹனிமூனில் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.