Kannika Snehan | ‛இப்படித்தான் என் தலைமுடியை வளக்குறேன்...’ - சினேகன் மனைவி கன்னிகா சொன்ன சீக்ரெட்!
"முகப்பரு உள்ளிட்ட பிரச்சனைகள் வரும். காலையில நானும் சினேகனும் பெரும்பாலும் சாப்பிட மாட்டோம்"
நடிகரும் கவிஞருமான சினேகன் தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்துக்கொண்டுள்ளார். இவருக்கும் சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளருமான கன்னிகாவிற்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. கன்னிகா சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவ். சினேகனின் பாடல்கள் , தான் வரைந்த படங்கள் , மேஜிக் செய்வது என பல வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
பிக்பாஸுக்கு கிளம்பிய தனது கணவரை வழியனுப்பி வைத்த வீடியோவையும் கூட பகிர்ந்திருந்தார். அது இணையதளத்தில் வைரலாக பரவியது. சினேகன் - கன்னிகா திருமணத்திற்கு பிறகு கன்னிகாவிற்கான ரசிகர்கள் எக்கச்சக்கமாக அதிகரித்துவிட்டனர். குறிப்பாக கன்னிகாவின் தலைமுடி ரகசியத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்றே சில கமெண்டுகளை முகாமிட்டுருப்பார்கள் . இந்த நிலையில் தனது தலைமுடி மற்றும் அழகின் ரகசியம் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார் கன்னிகா.
View this post on Instagram
அதில் ” நீளமான முடிதான் என்னுடைய அடையாளம். அதை எனக்கு வெட்ட எனக்கு மனசு வராது. சில ஆடைகள் அணியும்பொழுது எனக்கு ஹேர்ஸ்டைல் செய்ய சிரமமா இருக்கும். மாடர்ன் டிரஸ் போட்டால் கொண்டை போட்டுக்கொள்வேன். அதுதான் எனக்கு வசதியாவும் இருக்கும் , அந்த ஆடைக்கு அழகாவும் இருக்கும்.தலை முடிக்காக மட்டுமல்ல , பொதுவாகவே நான் சாப்பிடும் விஷயங்கள்ல அதிக கவனம் செலுத்துவேன். நாம் என்ன சாப்பிட்டுறோமோ அதுதான் உடல்ல பிரதிபலிக்கும் வாயை கட்டுப்படுத்தனும்.
காலையில் எழுந்து முதல் வேலையா சுடு தண்ணீர் குடிப்பேன். அதிகாலையில 300 மிலி தண்ணீரை 10 வருடங்களா குடிச்சுட்டு இருக்கேன். அதன் பிறகு பால் பொருட்கள் எதுவுமே எடுத்துக்கொள்ள மாட்டேன். அப்படி சாப்பிட்டா நெஞ்சு எரிச்சல் , முகப்பரு உள்ளிட்ட பிரச்சனைகள் வரும். காலையில நானும் சினேகனும் பெரும்பாலும் சாப்பிட மாட்டோம். சில விஷயம் மட்டும் சாப்பிடுவேன். நான் முளைகட்டிய பாசிப்பயிறு சாப்பிடுவேன் . சிநேகன் 5 முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவாங்க. வறுவல், எண்ணெய் பொருட்களை தவிர்க்க வேண்டும். வீட்டில் தின்பண்டங்கள் வாங்குவதே கிடையாது. ஏனென்றால் நான் பயங்கரமா சாப்பிடுவேன். அதனால அதை கட்டுப்படுத்த வாங்குறதையே தவிர்த்தாச்சு“ என தனது ஃபிட்னஸ் சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார் கன்னிகா .