Dharsha Gupta: என் தூக்கத்தை கெடுக்குறீங்க.. கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட தர்ஷா குப்தாவிடம் குமுறிய ரசிகர்!
இளம் நடிகையான தர்ஷா குப்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் 23 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் சமீபகாலமாக வித்தியாசமான கேப்ஷன்களையும் வெளியிட்டு வருகிறார்.
பிரபல நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு இணையவாசிகளும், அவரது ரசிகர்களும் ஹார்ட்டின்களை பறக்க விட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பிரபலங்களை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் மகிழ்ச்சி, சோகம் போன்ற தருணங்களில் கமெண்டுகளை பதிவிட்டு கண்ணின் மணி போல ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இளம் நடிகையான தர்ஷா குப்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் 23 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.
அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர், ஒவ்வொரு பண்டிகையின் போது அதுதொடர்பான ஆடைகளோடு பதிவுகளை வெளியிடுவார். கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவளும் நானும் என்ற சீரியல் மூலம் தான் தர்ஷா நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்கள் நடித்துள்ளார்.
விஜய் டிவியின் முகமாக அறியப்பட்ட தர்ஷா குப்தா அதில் ஒளிபரப்பான காமெடி சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதனிடையே 2021 ஆம் ஆண்டு வெளியான மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் படம் மூலம் நடிகையான சினிமாவுலகில் நுழைந்தார். தொடர்ந்து சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் தர்ஷா குப்தா நடித்தார்.
View this post on Instagram
கடந்த சில மாதங்களாவே இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிடும் தர்ஷா, அதனுடன் பதிவிடும் கேப்ஷன்கள் மிகவும் பிரபலமானதாக மாறிவருகிறது. இதனிடையே தற்போது நீச்சல் குளத்தில் நனைந்தபடி அவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், “எத்தனை இலக்குகளை அடைந்திருந்தாலும், அடுத்த இலக்கை அமைத்துக்கொள்” என கூறியுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்களும். இணையவாசிகளும் ஹார்ட்டின்களை பறக்க விட்டுள்ளனர். மேலும் அதில், 'நான் வரையாத ஓவியம்!’, ‘அழகான சிற்பம் தர்ஷா’, ‘இவங்க வேற அடிக்கடி இந்த மாதிரி photos போட்டுட்டு நம்ம பசங்கள தூங்க விடாம disturb பண்ணிட்டு இருக்காங்க’, ‘அடிக்கடி இப்படி போஸ்ட் போட்டு என் இதயத்தை தாக்குகிராய்’ என கமெண்டுகளை பறக்க விட்டுள்ளனர்.