Aishwarya Lekshmi: ஆசையாக வாங்கிய கார்.. ஆபாசமாக பேசிய நெட்டிசன்கள்... நொந்துபோன நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
எந்த காதல் தோல்வியால் நான் துவண்டு போனேனோ, அதிலிருந்து வெளியே வர பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்திற்கு அந்த கார் டெலிவரியாக வேண்டும் என நினைத்தேன் என ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.

காதல் தோல்வியில் இருந்து தான் மீண்ட கதையை நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன்னைச் சுற்றும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழில் ஆக்ஷன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் சிலகால இடைவெளிக்குப் பின் மீண்டும் மலையாள சினிமாவில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள ஆஷா படம் கடந்த செப்டம்பர் 11ம் தேதி ரிலீசாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியுடன் ஊர்வசி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இப்படத்தை இயக்கியுள்ளார். இதனிடையே ஐஸ்வர்யா லட்சுமி நேர்காணல் ஒன்றில் தன் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அப்படியாக காதல் தோல்வி பற்றியும் தெரிவித்திருக்கிறார்.
காதல் தோல்வியும் சொகுசு காரும்
அதாவது, “2024ல் எனக்கு காதல் தோல்வி ஏற்பட்ட நிலையில் மீண்டும் என்னை நானே கட்டமைத்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு கார் வாங்கினேன். சொல்லப்போனால் அது என் வாழ்க்கையின் மிக மோசமான காலக்கட்டமாக இருந்தது. இதனால் நான் பல படங்களில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டது. இவற்றையெல்லாம் நான் எதிர்கொள்கிறேன் என என் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
இதனிடையே சுஷ்மிதா சென் தன் காதல் தோல்விக்குப் பின் அதிலிருந்து மீள தனக்கு பிடித்த வைர நகைகளை வாங்கினார். அதற்கு இணையாக நான் ஒன்றை பெற விரும்பினேன். எனக்கு கார்கள் மீது அதீத பிரியம் இருந்தது. அதனால் ட்ரைபெக்கா ப்ளூ நிறத்தில் ஒரு ரேஞ்ச் ரோவர் எவோக் காரை வாங்கினேன். எந்த காதல் தோல்வியால் நான் துவண்டு போனேனோ, அதிலிருந்து வெளியே வர பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்திற்கு அந்த கார் டெலிவரியாக வேண்டும் என நினைத்தேன். இதுதான் என்னுடைய தரம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.
மக்கள் நம்ப தயாராக இல்லை
தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, ஆனால் அந்தக் காரைத் தானே வாங்கியதை மக்கள் நம்ப தயாராக இல்லை. சிலர் என்னை சமூக ஊடகங்களில் கார் வாங்கியது குறித்து இழிவாக பேசினார்கள். ஒரு காரை வாங்குவதற்கு அவர் என்ன மாதிரியான மோசமான வேலையைச் செய்தார் என்று நேரடியாகவே பேசினார்கள். எனினும் அந்த கருத்துகள் தன்னைப் பாதிக்கவில்லை. ஒரு நாள் நான் படப்பிடிப்புக்குச் சென்றிருந்தபோது ஒருவர் என்னிடம் வந்து அந்த கார் யார் பரிசாக கொடுத்தது என கேட்டார்.
எனக்கு அப்போது மனதில் தோன்றியது ஒன்று தான். இப்படியெல்லாம் பரிசுகள் கிடைக்கும் என்றால் நான் ஏன் படங்களில் நடிக்க வேண்டும் என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அந்த நபர் கேட்ட பிறகே நான் பதிவிட்ட போட்டோவில் இருந்த கமெண்டுகளைப் படித்து என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்துக் கொண்டேன். சொல்லப்போனால் கார் வாங்கியது எனக்கு கிடைத்த தனிப்பட வெற்றியாகும்” என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















