''ஒரு குழந்தையைப் போல நிம்மதியாய் தூங்குறேன்..'' வரி குறித்து வரிவரியாய் பேசிய விநோதினி!
அந்த வரிசையில் நடிகர் விநோதினி மிக சுவாரசியமான நகைச்சுவை கலந்த பதிவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
வருமானவரி செலுத்துவது தொடர்பாக பல்வேறு பிரபலங்களும் பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்வார்கள். அந்த வரிசையில் நடிகர் விநோதினி மிக சுவாரசியமான நகைச்சுவை கலந்த பதிவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
அதில்,”இப்போது கடந்த 20 ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் வரி செலுத்தி வருகிறேன். எனது முதல் வேலை 2002ல், அப்போது தொடங்கியே வரி செலுத்துகிறேன். எனக்கு வருமானம் இல்லாத, நாடகம் கற்றுக்கொண்டிருந்த பொருளாதாரம் மெலிந்த காலத்திலும், பண வருமானம் உட்பட எனது சொற்ப வருமானத்தை அறிவித்தேன். வருமானவரி செலுத்தி சரியாக இருங்கள் என்கிறார்கள். நேர்மையாக இருங்கள் என்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் நிலுவைத் தொகையை நாட்டிற்குச் செலுத்துகிறார்கள். ஆனால் அதற்கு ஈடாக அவர்கள் எதையும் பெறுவதில்லை. அவர்கள் தேர்ந்தெடுத்த வேலையில் தங்கள் முதலாளிகள் அல்லது அரசாங்கத்திடமிருந்து மானியப் பலன்கள் கூட அவர்கள் பெறுவதில்லை. நேர்மையான நபராக இருப்பதற்கு இந்த நாட்களில் எந்தவித ஊக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. வருமான வரி செலுத்துவதால் ஒரே ஒரு நன்மை என்னவென்றால் நான் ஒவ்வொரு இரவும் ஒரு குழந்தையைப் போல நிம்மதியாகத் தூங்குகிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்துவது கட்டாயமானது. வருமான வரி ஈட்டுபவர்களுக்கு சில விலக்கு அளிப்பட்டு வந்த நிலையில், வருமான வரித்துறை தற்போது அதை நீக்கியுள்ளது. 2021-22 நிதியாண்டிற்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2022 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் தனிநபர்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா என்பதைச் சரிபார்க்க வேண்டும். காலக்கெடுவைத் தவறவிட்டால், அபராத தொகையுடன் வருமான வரியை செலுத்த வேண்டியிருக்கும். அல்லது வருமான வரி துறையால் உங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம். தனிநபரின் வருமானம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலக்கு வரம்பை விட அதிகமாக இருந்தால், அந்த நபர் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.