Watch Video : படப்பிடிப்பு தளத்தில் "பறை" அடித்து பட்டையை கிளப்பிய நடிகர் விமல்..! - வீடியோ
நடிகர் விமல் பறையிசை கலைஞர்களுடன் சேர்ந்து பறையடித்து ஆடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விமல். பசங்க படம் மூலமாக முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, களவாணி, வாகை சூடவா ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவரது படங்கள் ஏதும் பெரியளவில் வரவேற்பை பெறாத நிலையில், ஓ.டி.டி. தளத்தில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
விலங்கு வெப்சீரிசுக்கு பிறகு விமல் தான் இழந்த மார்க்கெட்டையும் திரும்ப பெற்றுள்ளார். இந்த நிலையில், தனது புதிய படமொன்றின் படப்பிடிப்பு தளத்தில் விமல் பறை அடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் காட்சி ஒன்றிற்காக வந்திருந்த பறையிசை கலைஞர்களுடன் நடிகர் விமலும் இணைந்து ஆடுகிறார். அவர் ஆடிக்கொண்டே பறை வாசிக்கிறார். இந்த வீடியோவை நடிகர் விமலே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
New movie shooting spot… pic.twitter.com/J9ixcUQRNT
— Actor Vemal (@ActorVemal) March 20, 2022
இந்த வீடியோவிற்கு கீழ் அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். நடிகர் விமல் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். சுமார் 7 ஆண்டுகளுக்க மேலாக அங்கு பயிற்சி பெற்று நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர், பின்னர் திரைப்படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர், இயக்குனர் பாண்டிராஜின் பசங்க படம் மூலமாக நல்ல கதாபாத்திரம் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து குடும்பப்பாங்கான படங்களில் நடித்து வந்த விமல், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் நடித்தார். அந்த படம் மிகவும் ஆபாசமாக இருந்ததால் அந்த படத்திற்கு மாதர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பிறகு நடிக்காமலே இருந்து வந்த விமல், நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்காக காத்திருந்தார். அதன்பின்னரே, விலங்கு வெப்சீரிசில் நடித்தார். அதன் வெற்றி விமலுக்கு மீண்டும் திரைத்துறையில் நல்ல வாய்ப்பை அளித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்