மேலும் அறிய

Thangalaan: தங்கலானே..! அட்டகாசமாக வெளியானது தங்கலான் 2வது பாடல் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

தங்கலான் படத்தின் இரண்டாம் பாடலான தங்கலானே பாடல் இன்று வெளியாகியது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெறுவது போல இந்த கதைக்களம் உருவாகியுள்ளது.

தங்கலானே பாடல் வெளியீடு:

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் மினுக்கி என்ற பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், இன்று தங்கலான் படத்தின் இரண்டாம் பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியது. இதையடுத்து, தங்கலானே பாடல் இன்று வெளியாகியது. தங்கலான் வார் சாங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலின் வரிகள் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாடல் வெளியானது முதலே ரசிகர்கள் இந்த பாடலை விரும்பி கேட்டு வருகின்றனர்.

ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் நர் விக்ரமுடன் பசுபதி, பார்வதி மேனன், மாளவிகா மோகனன், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார், அர்ஜூனன் அன்புதன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆங்கிலேய அதிகாரியாக டேனியல் கால்டகிரோன நடித்துள்ளார்.

ட்ரெயிலருக்கு அமோக வரவேற்பு:

தங்கச்சுரங்கத்தை பின்னணியாக கொண்ட இந்த தங்கலான் படத்தின் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 3 வாரத்திற்கு முன்பு வெளியான இந்த படத்தின் ட்ரெயிலர் ஆங்கிலேயர்களின் தங்க தேவைக்காக தங்கம் தேடும் பழங்குடியின மக்களும், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை படமாக எடுத்துள்ளனர். இதில் மாளவிகா மோகனன் ஆரத்தி என்ற வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெயிலரில் விக்ரம் உள்பட அனைவரின் நடிப்பும் மிரட்டலாக இருந்தது. இதற்கு ரசிகர்கள் ஏற்கனவே பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.

கடந்த 2 வாரத்திற்கு முனு்பு வெளியான மினுக்கி பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வெளியாகியுள்ள தங்கலான் பாடலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஏ.கிஷோர் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா எடிட் செய்துள்ளார். தங்கலான் படம் சுதந்திர தின விருந்தாக வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது.

விக்ரம் நடிப்பில் இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் வந்தது. இதையடுத்து, விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் வெளியாக இருக்கிறது. தங்கலான் படத்திற்கு பிறகு விக்ரம் வீரதீர சூரன் என்ற படத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
IND vs WI: கொழுத்திய ஹோப்.. ரூட் எடுத்து செட்டிங் செய்த ரூதர்ஃபோர்ட்! 172 ரன்களை எட்டுமா இந்தியா?
IND vs WI: கொழுத்திய ஹோப்.. ரூட் எடுத்து செட்டிங் செய்த ரூதர்ஃபோர்ட்! 172 ரன்களை எட்டுமா இந்தியா?
Embed widget