மேலும் அறிய

Dhruva Natchathiram: தூசி தட்டப்படும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ .. இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு  “துருவ நட்சத்திரம்” படம் தொடங்கப்பட்டது.  நடிகர் சூர்யாவுக்கு என எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க மறுத்தார்.இதனால் கதையில் சில மாற்றம் செய்யப்பட்டு விக்ரம் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் 2017 ஆம்  ஆண்டு வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

இதேபோல் “ஒரு மனம்” பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் அதன்பிறகு எந்தவித அப்டேட்டும் படக்குழு சார்பில் வெளியாவில்லை. ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் பல ஆண்டுகள் கழித்து தான் ரிலீசானது. இதனால் ரசிகர்கள் துருவ நட்சத்திரம் படமும் வெளியாகுமா இல்லையா என குழம்பி தவித்தனர்.

இந்நிலையில்  சில மாதங்களுக்கு முன் துருவ நட்சத்திரம் படம் முடிவடைய உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கும் எனவும் இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர்  ஹாரிஸ் ஜெயராஜ்  துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசை தொடங்கியதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  

டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம் எனவும் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஹாரிஸ் ஜெயராஜ் - கௌதம் மேனன் கூட்டணியில் படம் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இப்படியான நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் 2வது பாடல் "His Name is John" ஜூலை 19 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
SAT Practice Test: மாணவர்களே.. தேர்வுகளில் வெல்ல கூகுள் ஜெமினியின் இலவசப் பயிற்சி! பயன்படுத்துவது எப்படி?

Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

State Creation: மாநிலத்தை பிரிப்பதற்கான வழிமுறைகள் என்ன? யார் அனுமதி அவசியம்? யாருக்கு அதிகாரம்? எப்படி

ABP Premium

வீடியோ

கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி
14 நாட்கள் ஜெயில்! ARREST ஆன ஷிம்ஜிதா! போராட்டத்தில் குதித்த ஆண்கள்
4000 குழந்தைகள்... ARUN ICECREAM கின்னஸ் சாதனை சென்னையை மிரளவைத்த சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
SAT Practice Test: மாணவர்களே.. தேர்வுகளில் வெல்ல கூகுள் ஜெமினியின் இலவசப் பயிற்சி! பயன்படுத்துவது எப்படி?
SAT Practice Test: மாணவர்களே.. தேர்வுகளில் வெல்ல கூகுள் ஜெமினியின் இலவசப் பயிற்சி! பயன்படுத்துவது எப்படி?
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
State Creation: மாநிலத்தை பிரிப்பதற்கான வழிமுறைகள் என்ன? யார் அனுமதி அவசியம்? யாருக்கு அதிகாரம்? எப்படி
State Creation: மாநிலத்தை பிரிப்பதற்கான வழிமுறைகள் என்ன? யார் அனுமதி அவசியம்? யாருக்கு அதிகாரம்? எப்படி
Madras University Convocation: ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை; சென்னைப் பல்கலை. விழாவைப் புறக்கணித்த அமைச்சர் செழியன்!

இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு

அமைதி காத்தது போதும்.! அதிரடியாக களத்தில் இறங்கும் விஜய்- தவெக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Skoda Kodiaq RS: சம்பவக்காரன் கம்மிங்.! ஸ்கோடாவின் முதல் மாடல் - சக்திவாய்ந்த இன்ஜின், கோடியாக் விலை, அம்சங்கள்

Embed widget