![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
"என்னை தேடவேண்டாம்ன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு போனவரு விஜய்" - மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்!
SA Chandrasekhar: 1992ல விஜய் (Vijay) நடிகன் ஆகணும் சொல்லும்போது முடியாது, நீ டாக்டர் ஆகணும், டாக்டர் ஆனா நான் உனக்கு ஹாஸ்பிடல் கட்டித்தரேனு சொல்லிட்டேன்.
![Actor Vijay Wrote letter not to look for me and ran away SA Chandrasekhar opens up in Yaar Indha SAC Youtube Channel](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/16/e1e6a04b1f90ebcf5767aa6cad203349_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகர் விஜய்யின் அப்பாவும் ஆன, எஸ்.ஏ.சந்திரசேகரன், ’யார் இந்த எஸ்.ஏ.சி’(Yaar Indha SAC) எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து, அதில் தான் கடந்து வந்த பாதைகளை ஒவ்வொரு பாகமாக வெளியிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் எஸ்.ஏ.சி. சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த புதிதில், யார் ஆதரவுமில்லாமல், பாண்டி பஜார் சாலையில் பல நாட்கள் படுத்து உறங்கியது, அரை இட்லி கூட சாப்பிடமால், வெறும் கார்பிரேஷன் தண்ணீர் மட்டுமே குடித்து 7 நாட்கள் இருந்தது என பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
இப்போது சமீபத்தில் எஸ்.ஏ.சி(SAC) தனது சேனலில் வெளியிட்ட புதிய யூடியூப் வீடியோவில்’ சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன், நம்பிக்கையுடன் இருந்ததையும், அதேபோல தன் மகன் விஜய்க்கும் அதே பிடிவாதம் இருந்ததையும் என பல விஷயங்களை பற்றி மனம் திறந்து பேசினார்.
நடிகர் விஜய்(Actor Vijay) குறித்து அவர் பேசுகையில், "நான் அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கும்போது இன்னொரு அசோசியேட் டைரக்டர் என்னை கேவலப்படுத்தினார். ஒரு நாள் செட்ல அவர்கிட்ட போய் டவுட் கேட்கும்போது பளார்னு கண்ணத்துல அடிச்சு’ ஒன்னும் தெரியல, நீயெல்லாம் எப்படிடா டைரக்ஷன் டிப்பார்ட்மெண்டுக்கு வந்த, எங்கயாவது ஹோட்டல்ல போயி தட்டு கழுவுடானு சொல்லிட்டாரு. அவர் சொல்லிட்டாருனு நான் ஹோட்டலுக்கு தட்டு கழுவ போகல. உனக்கு முன்னாடி நான் வந்து காட்டுறேண்டானு’ எனக்குள்ள ஒரு வைராக்கியம் இருந்தது. சில நியாயமான பிடிவாதம் இருக்கிறதுல தப்பே இல்லை. அதனால தான் இன்னைக்கு நான் இந்த அளவுக்கு வந்தேன். விஜய்க்கும் அதே பிடிவாதம் இருந்தது, என்னோட ஜீன் தானே அப்படிதான் இருப்பார். என் மகனோட பிடிவாதம் தான் இன்னைக்கு அவர் இருக்கிற இடத்துக்கு காரணம்.
1992ல விஜய் நடிகன் ஆகணும் சொல்லும்போது முடியாது, நீ டாக்டர் ஆகணும், டாக்டர் ஆனா நான் உனக்கு ஹாஸ்பிடல் கட்டித்தரேனு சொல்லிட்டேன். அதை கேட்டுட்டு விஜய் ஒரு டாக்டரவோ, இன்ஜினியராவோ, ஒரு லட்சம் சம்பளத்தை வாங்கிட்டு அப்படியே காலத்தை ஓட்டிருக்கலாம். ஆனா விஜய் அப்படி பண்ணல. விஜய் ரொம்ப பிடிவாதமா இருந்தாரு, ஒருவிதத்துல எங்களை மிரட்டுனாரு. என்னை தேடவேண்டம்ன்னு லெட்டரை எழுதி டைனிங் டேபிளில் வச்சுட்டு வீட்ட விட்டு போயிட்டாரு. நாள் முழுக்க நானும், ஷோபாவூம் தேடினோம், ஒரே மகன் எப்படி இருக்கும் பெத்தவங்களுக்கு. நாள் முழுக்க அலைஞ்சு திரிஞ்சு, கடைசியில உதயம் தியேட்டர்ல அவர் படம் பாத்துட்டு இருக்காருனு தகவல் வந்தது. அதுக்குபிறகு அங்க போய் கூட்டிட்டு வந்தோம். அந்த வைராக்கியம் தான் முக்கியம். எங்களை மிரட்டுனாரோ, பயமுறுத்துனாரோ ஏதோ ஒன்னு, வைராக்கியம் தான் முக்கியம். அதை பண்ணாம இருந்திருந்தா, இன்னைக்கு இருக்கிற விஜய்ய உங்களால பாத்துருக்க முடியாது. இந்த வைராக்கியம் தான் இளைஞர்களுக்கு வேணும்." என்று பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)