Viruman : விருமன் படத்தில் சர்ஃப்ரைஸ் என்ட்ரி கொடுத்த விஜயின் மனைவி... துள்ளி குதித்த ரசிகர்கள்
நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். கதாநாயகி அதிதி சங்கரின் மொத்த குடும்பமும் இன்று காலை ரோகிணி தியேட்டரில் விருமன் படம் முதல் ஷோவை பார்த்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியது.
விருமன் படத்தில் விஜய்யின் மனைவி :
விருமன் திரைப்பட கதாநாயகி அதிதி சங்கரின் மொத்த குடும்பமும் இன்று காலை ரோகிணி தியேட்டரில் விருமன் படம் முதல் ஷோவை பார்த்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் குடும்பத்தினருடன் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் திரையரங்குக்கு வந்திருந்தார். அந்த போட்டோவையும் வீடியோவையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இயக்குநர் சங்கர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் துணை இயக்குநராய் பணிபுரிந்தவர். மேலும் நடிகர் விஜய், ஷங்கர் இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இரண்டு குடும்பங்களும் நெருக்கமான உறவை கொண்டுள்ளதால் அதிதிக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினருடன் விஜய் மனைவி சங்கீதாவும் இன்று காலை திரையரங்குக்கு சென்று விருமன் பட முதல் ஷோவை பார்த்துள்ளார்.
மேலும் இணையவாசிகள் நடிகர் விஜய்யும் முதல் ஷோவிற்கு வந்திருந்ததாக வதந்திகளை பரப்பி வந்தனர். ஆனால் அதற்கு ஆதாரமாக எந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இல்லை. மேலும் நடிகர் விஜய் தற்பொழுது அவரது அடுத்த படமான வாரிசு பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விருமனை பாராட்டும் ரசிகர்கள் :
காலையிலேயே முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக உள்ளதாகவும், கார்த்தி, அதிதி உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
Amazing responses 🔥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) August 12, 2022
Catch #Viruman in theatres now!@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial pic.twitter.com/Ry9FjTnozW
முன்னதாக படத்துக்கான ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டது. படம் குறிப்பிட்ட சாதி குறித்து எடுக்கப்பட்டுள்ளதற்கு கார்த்தி அப்படி எல்லாம் இல்லை என விளக்கமளித்தார். இதேபோல் மதுரை வீரன் பாட்டை ராஜலட்சுமி பாடியிருந்த நிலையில், அதனை நீக்கி விட்டு ஹீரோயின் அதிதியை யுவன் சங்கர் ராஜா பாட வைத்ததாக எழுந்த சர்ச்சைக்கு ராஜலட்சுமியே முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் படம் பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்