மேலும் அறிய

Vijay Sethupathi: புஷ்பா 3 படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி! விடாமல் துரத்தும் நெகட்டிவ் ரோல்!

அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்தின் 3 ஆம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இனிமேல் வில்லன் கதாபாத்திரங்கள் நடிப்பதை தவிர்ப்பேன் என்று சொன்ன நிலையில் மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி

துணை நடிகராக இருந்து இன்று மிகப்பெரிய பான் இந்திய ஸ்டாராக மாறியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. தனக்கு ஒரு படத்தின் கதை பிடித்துவிட்டது என்றால் சின்னதோ பெரிசோ எந்த கதாபாத்திரம் என்றாலும், நடித்து விடுவார் . அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் நடிகர்கள் நடிக்கத் தயங்கிய வில்லன் கதாபாத்திரத்தை விரும்பி நடித்தார் அவர். மாஸ்டர், விக்ரம் , ஜவான், உள்ளிட்டப் படங்களில் வில்லனாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். ஷாருக்கான் நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க 21 கோடி அவர் சம்பளமாக பெற்றார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இனி வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்

தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி திடீரென்று இனிமேல் தான் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று சில மாதங்கள் முன் தெரிவித்திருந்தார். எவ்வளவு உழைப்பு போட்டு நடித்தாலும் ஹீரோவின் இமேஜை கெடுத்து விடுவதாக கூறி, வில்லனாக தான் நடித்த காட்சிகள் வெட்டப் படுகின்றன என்று அவர் தனது வருத்தத்தை தெரிவித்தார். இதனால் இனிமேல் வில்லன் கதாபாத்திரங்கள் நடிப்பதை குறைத்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.

விடாமல் துரத்தும் வில்லன் ரோல்கள்

அடுத்தடுத்து நடிக்க நிறையப் படங்களை கையில் வைத்திருந்தாலும் விஜய் சேதுபதிக்கு நிறைய வில்லன் கதாபாத்திரங்கள் வருவதாகவும் அவற்றை அவர் தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாக  இருக்கும் புஷ்பா படத்தின் 3 ஆவது பாகத்தில் மட்டும் வில்லனாக  நடிக்க அவர் சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புஷ்பா 3

அல்லு அர்ஜூன் நடித்து சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. மிகப்பெரிய பான் இந்தியா வெற்றிபெற்ற இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு ஜப்பானில்  நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படியான நிலையில் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanniyarasu Slams Aadhav Arjuna: ’’விஜய்தான் முக்கியமா! திருமாவை அவமதிக்காதே!'’ வன்னியரசு எச்சரிக்கைAllu Arjun son letter: ‘’அப்பா நீங்கதான் NO.1’’ மகன் எழுதிய CUTE LETTER! எமோஷனலான அல்லு அர்ஜுன்TANGEDCO Adani Tender: 19000 கோடி TANGEDCO டெண்டர்! தட்டி தூக்கிய அதானி! சிக்கலில் செந்தில்பாலாஜி?Drinking water mixed with sewage | குடிநீரில் கலந்த கழிவுநீர்? குடித்த நேரத்தில் பலியான 3 உயிர்..உச்சக்கட்ட பரபரப்பில் தாம்பரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Embed widget