மேலும் அறிய

LEO Second Single: நள்ளிரவில் வெளியான லியோ அப்டேட்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்..!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் 2 ஆம் பாடலுக்கான கிளிம்ப்ஸ் வீடியோ நள்ளிரவில் வெளியான நிலையில் வரவேற்பை பெற்றுள்ளது. 

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் 2 ஆம் பாடலுக்கான கிளிம்ப்ஸ் வீடியோ நள்ளிரவில் வெளியான நிலையில் வரவேற்பை பெற்றுள்ளது. 

அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டர்கள் திருவிழாவாக மாறப்போவது உறுதி. அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜின் ஐந்தாவது படமாக உருவாகியுள்ள “லியோ” தான்.  இப்படத்தில்  விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ், ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் உள்ளிட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள நிலையில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

மாஸ்டர் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் - விஜய் இணையும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்கேற்றாற்போல் படத்தின் அப்டேட்டுகளும் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தி விட்டது. என்ன கதை என யூகிக்க முடியாத அளவுக்கு அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியான அன்றே ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டது முதல் விஜய் பிறந்தநாளன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், அவர் பாடிய நா ரெடி பாடல் வெளியிட்டது வரை ரசிகர்களை தொடர்ந்து படக்குழு மகிழ்ச்சியில் வைத்து வருகிறது. 

அதுமட்டுமல்லாமல் சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோரின் கேரக்டர்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இசை வெளியீட்டு விழா நடக்கவிருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணம் என தயாரிப்பு தரப்பு விளக்கம் கொடுத்திருந்தாலும், அரசியல் அழுத்தம் என மற்றொரு பக்கம் விமர்சனமும் எழுந்துள்ளது. இந்த சூழலில் ரசிகர்களை ஆறுதல் படுத்தும் வகையில் லியோ படத்தின் 2வது பாடல் இன்று (செப்டம்பர் 28) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் Badass என தொடங்கும் இப்பாடல் படத்தின் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் வகையில் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனாலும் மாலை 6 மணிக்கு வெளியாகும் இந்த பாடலின் இசை ரசிகர்களை கவரும் என்பதில் எந்த மாற்றமுமில்லை. ஆயினும் இன்றைய நாள் முழுவதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

இதற்கிடையில் லியோ ட்ரெய்லர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லியோ ட்ரெய்லர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாகவும் ரத்து செய்யப்பட்ட நிலையில், ட்ரெய்லர் வெளியீட்டு ரசிகர்களை சமாதானம் செய்யலாம் எனவும் படக்குழு முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. என்ன ஆனாலும் அடுத்து வரப்போகிற 20  நாட்களும் சமூக வலைத்தளங்கள் லியோ படத்தின் அப்டேட்டால் களைக்கட்டப்போவது உறுதி..!


மேலும் படிக்க: Leo Audio Launch: ‘அடிபட்டு மேலே வருபவனே தலைவன் ஆவான்’ .. ரசிகர்களை உசுப்பேற்றும் விஜய்.. வீடியோ வைரல்..!

தலைப்பு செய்திகள்

இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
இது நிஜமா? அஜித்துடன் இணையும் விஜய்! 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் அரங்கேறும் மாஸ் சம்பவம்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Bigg BossTamil 10: தலைவனுக்கான தகுதியே இல்ல.. விஜயை வம்பிழுத்தாரா விஜய் சேதுபதி? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin's Plan: ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
ராகுலுக்கு எதிராக 3-ம் அணி; ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்; தூதாக போன கனிமொழி; திட்டம் என்ன.?
NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
Tamil Nadu By Election : விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் .! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Sorento Vs Fortuner Diesel: டீசல் SUV-ல் கடும் போட்டி.! சொரெண்டோவா.? ஃபார்ச்சூனரா.? எது உங்களுக்கு சிறந்தது.? முழு ஒப்பீடு
டீசல் SUV-ல் கடும் போட்டி.! சொரெண்டோவா.? ஃபார்ச்சூனரா.? எது உங்களுக்கு சிறந்தது.? முழு ஒப்பீடு
Victoris CNG on EMI: சூப்பர் மைலேஜ் கொடுக்கும் SUV.! மாருதி விக்டோரிஸ் CNG வாங்கப் போறீங்களா.? முன்பணம், EMI எவ்ளோ.? பாருங்க
சூப்பர் மைலேஜ் கொடுக்கும் SUV.! மாருதி விக்டோரிஸ் CNG வாங்கப் போறீங்களா.? முன்பணம், EMI எவ்ளோ.? பாருங்க
Pension : ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
Embed widget