19வது ஆண்டில் யூத்: படத்தின் பாடல்கள் என்றும் யூத்... மணிசர்மாவின் மயக்கும் இசை கேளுங்க!
விஜய் நடிப்பில் வெளியான யூத் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான சிறப்பான திரைப்படங்களில் ஒன்று யூத். இந்தத் திரைப்படம் 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி வெளிவந்தது. இன்றுடன் இந்தப் படம் வெளியாகி 19 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்தப் படத்தில் விஜய், ஷஹீன் கான், விவேக், யுகேந்திரன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடிகை சிம்ரன் வருவார். இந்தப் படத்தை வின்சென்ட் செல்வா இயக்கியிருப்பார். மணி சர்மா இசையில் இந்தப் படத்தில் அமைந்த 4 பாடல்கள் நல்ல ஹிட் அடித்தன. 19ஆம் ஆண்டு யூத்தான் அந்த யூத் பாடல்களை சற்று திரும்பி பார்ப்போம்.
1. சகியே சகியே:
மணிசர்மாவின் இசையில் ஹரிணி மற்றும் ஹரிஹரன் இந்தப் பாடலை பாடியிருப்பார்கள். இந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருப்பார்.
"எந்தன் உயிரும்
உடலும் உந்தன் திசையில்
சாய்ந்தது சாய்ந்தது என்ன
உன் மாா்பும் உன்
தோளும் என் வீடு என்னென்ன
செய்வாயோ உன் பாடு.."
2. சந்தோஷம் சந்தோஷம்:
பாடகர் எஸ்பிபி இந்தப் பாடலை பாடியிருப்பார். இப்பாடலில் தன்னுடைய அத்தை மகளை விஜய் சந்தோஷ படுத்த முயலுவது சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இப்பாடலின் வரிகளும் அவ்வளவு அழகாக இருக்கும்.
"ஆண்டவன் ஆசையே
இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது
சாத்தியமா நன்மை என்றும் தீமை
என்றும் நாலு போ்கள் சொல்லுவது
நம்முடைய பிழை இல்லையே
துன்பமென்ற சிப்பிக்குள்
தான் இன்பமென்ற முத்து வரும்
துணிந்த பின் பயம் இல்லையே.."
3. சக்கரை நிலவே:
ஹரிஸ் ராகவேந்திரா குரலில் அமைந்த சிறப்பான பாடல் இது. இந்தப் பாடலின் வரிகள் மற்றும் பின்னணி இசை அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும். விஜய் நடிப்பில் வெளியான சிறப்பான பாடல்களில் ஒன்றாக இதை குறிப்பிடலாம். அந்த அளவிற்கு நமக்கு ஒரு நல்ல அமைதியை தரும்.
"சுகமான குரல் யாா்
என்றால் சுசீலாவின் குரல்
என்றேன் எனக்கும் அந்த
குரலில் ஏதோ மயக்கம்
என நீ சொன்னாய் கண்கள்
மூடிய புத்தா் சிலை என் கனவில்
வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான்
பிடிக்கும் என்றாய் அடி உனக்கும்
உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை
ஏன் பிடிக்காதென்றாய்..."
4. அடி ஒன் இன்ச்:
எஸ்பிபி மற்றும் சுஜாதா குரலில் அமைந்தப் பாடல் இது. இந்தப் பாடலின் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருப்பார். இப்பாடலின் வரிகளும் சிறப்பாக இருக்கும்.
"உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே
உன்னோடு நான் சேர ஒரு விண்ணப்பம் போட்டேனே
ஓகேனு நான் சொல்லி அதில் கையொப்பம் போட்டேனே
இனி என்ன உன்னை பின்ன வேறு லைசென்சு வேண்டாமே
புது பிஞ்சு பார்த்து கொஞ்சு ஒரு பார்டர் நீ தாண்டாதே
அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப்பு ஏண்டியம்மா...."
5. ஆள் தோட்ட பூபதி:
ஷங்கர் மகாதேவனின் குரலில் அமைந்த சிறப்பான துள்ளல் பாடல் இது. இந்தப் பாடலுக்கு மட்டும் விஜய் உடன் நடிகை சிம்ரன் நடனம் ஆடியிருப்பார். இவர்கள் இருவரின் நடனமும் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும். இந்தப் பாடலின் நடனத்திற்கு மட்டுமே இன்று வரை தனியாக ரசிகர்கள் உள்ளனர். விஜய்-சிம்ரன் கூட்டணி என்றாலே பாட்டு மட்டுமல்ல நடனமும் ஹிட் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.
"இவ கன்னி ராசி
நான் கண்ணன் ராசி நம்ம
ஜாதகத்தில் இனி நல்ல ராசி
வாடி பொட்ட புள்ள என்னை
யாரும் தொட்டதில்ல ஓர
பாா்வையாலே என்னை ஓங்கி
அறைஞ்சவளே..."
இந்தப் படத்தில் வந்த ஐந்து பாடல்களும் நல்ல அளவில் ஹிட் அடித்தது. படத்துடன் சேர்ந்து பாடல்களும் வெற்றியடைந்து இந்தப் படத்தை காலத்திற்கும் அழியாத ஒரு நினைவு படமாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சண்டே நைட் ப்ளேலிஸ்ட் : ஸ்ரேயா கோஷல் ஹிட்ஸ்..!