![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Vijay Meets CM KCR: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவை சந்தித்த நடிகர் விஜய் - காரணம் இதுதான்?
நடிகர் விஜய் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவை இன்று சந்தித்துள்ளார்.
![Vijay Meets CM KCR: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவை சந்தித்த நடிகர் விஜய் - காரணம் இதுதான்? Actor Vijay Meets Telangana CM KC Chandrasekhar Rao at Pragati Bhavan Hyderabad Vijay Meets CM KCR: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவை சந்தித்த நடிகர் விஜய் - காரணம் இதுதான்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/18/65dbe40e7f46b3cf47029f7cf8799429_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவை நடிகர் விஜய் இன்று சந்தித்துள்ளார். நடிகர் விஜய் தன்னுடைய 66-வது படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது ஹைதராபாத்தில் உள்ளார். இந்நிலையில் அவர் தெலங்கானா முதல்வரை சந்தித்துள்ளார்.
இது வேறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே அவர் புதுச்சேரியில் படப்பிடிப்பில் இருந்த போது நடிகர் விஜய் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அதன்பின்னர் தற்போது தெலங்கானா முதல்வரை சந்தித்துள்ளார்.
@actorvijay met @TelanganaCMO #KCR at Hyderabad today @trspartyonline #Vijay pic.twitter.com/EByWmgbF4Q
— Ireddy Srinivas Reddy (@ireddysrinivasr) May 18, 2022
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் தளபதி 66 படம் உருவாகிறது. இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். முதல் கட்ட ஷுட்டிங்கில் குட்டியாக ஒரு பாடல் மட்டும் சென்னையில் எடுத்து விட்டு தற்போது இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை ஐதராபாத்தில் நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் கடந்த ஒரு வாரமாக ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
⚡️ “தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவை சந்தித்த நடிகர் விஜய்” #Vijay #Actorvijay @actorvijay #ThalapathyVijay𓃵https://t.co/iAlBVVamMn
— ABP Nadu (@abpnadu) May 18, 2022
முதலில் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இவர்களெல்லாம் படத்தில் இருக்கிறார்கள் என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் ஒவ்வொன்றாக நேற்று அறிவித்து வந்தது. இதில் பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா ஆகியோரும் உடன் நடிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. இவர்களுடன் நடிகர் யோகிபாபு மற்றும் சம்யுக்தா உள்ளிட்டோரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)