Watch Video : பிளாட்ஃபார்மில் தூங்கும் விஜயின் தந்தை எஸ்ஏசி: இணையத்தில் வைரலாகும் வீடியோ
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னை தி.நகர் நடைமேடையில் படுத்து உறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னை தி.நகர் நடைமேடையில் படுத்து உறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளைய தளபதி விஜய்யின் தந்தை, ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் தனக்கென ஒரு தனி இடத்தை இயக்குநராக, எழுத்தாளராக பிடித்தவர். நடிகர் விஜய்யை உருவாக்க அவர் கடும் பிரயத்தனங்களை செய்தார் என்பதை மறக்க முடியாது.
இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுபவர்கள் பலர். ஆனால், எஸ்ஏசி இயக்குநர் என்பதால் அவர் தனது பாணியிலேயே வீடியோ வடிவில் சுயசரிதையைக் கூற முடிவு செய்துள்ளார்.ஏற்கனவே அந்த சேனலில் ப்ரோமோ ஒன்றை ரிலீஸ் செய்திருந்தார். இந்நிலையில், எஸ்.ஏ.சி தனது முதல் வீடியோவை ’பிளாட்பார்மில் எஸ்ஏசி’ என்ற தலைப்பில் தற்போது ரிலீஸ் செய்துள்ளார். முதல் வீடியோவின் யூடியூப் லிங்கை, எஸ்ஏசி இயக்கத்தில் உருவாகி வரும் நான் கடவுள் இல்லை படத்தில் ஹீரோவாக நடித்து வரும் சமுத்திரகனி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
அதில், “ஒரு உண்மையான உழைப்பு உச்சம் தொட்ட கதை.. வாழ்த்துக்கள் சார்.. இன்னும் வெல்வோம்..” எனப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தொடங்கும்போது பளபள சிவப்பு நிறக் காரில் எஸ்ஏசி திநகர் பாண்டிபஜார் நாயுடுஹால் முன் வந்திறங்குகிறார். அங்கே படுத்துறங்குபவர்களை ஏக்கமாகப் பார்த்துவிட்டு, டிக்கியில் இருந்து ஒரு பாய் தலையணையை எடுத்துக் கொள்கிறார்.
பின்னர் நாயுடுஹால் வாசலில் பாயை விரித்து அமர்ந்து பேச ஆரம்பிக்கிறார். அதில் அவர் தன்னுடைய 60 ஆண்டுகால வாழ்க்கை பயணம் குறித்து பேசுகிறார். என்ன இங்கே உட்கார்ந்திருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா? அப்போது தான் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து தான் தன்னுடைய சென்னை வாழ்க்கையை தொடங்கியதாகக் கூறினார். இதே இடத்தில் 47 நாட்கள் இருந்திருக்கிறேன். சென்னைக்கு சினிமாக் கனவுடன் வந்தேன். சொந்த பந்தத்தைப் பார்க்கப் பிரியமில்லை. அதனால் சாதிக்கும் கனவுடன் இங்கு தான் தங்கியிருந்தேன். என்னுள் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மட்டுமே இருந்தது. சினிமாவில் ஒரு எழுத்தாளனாக, இயக்குநராக வேண்டும் என்ற கனவை நெஞ்சிலும், கதை அடங்கிய ஃபைலை கையிலும் சுமந்து கொண்டு திரிந்து பெற்ற வாய்ப்பு. அதைப் பயன்படுத்தி வெற்றி பெற்றேன்.
ஒரு உண்மையான உழைப்பு உச்சம் தொட்ட கதை ..💪💪💪💪💪💪💪💪💪💪வாழ்த்துக்கள் சார்…இன்னும் வெல்வோம்..,https://t.co/Cu7Mj0eWqL pic.twitter.com/uxWBLkzStH
— P.samuthirakani (@thondankani) March 5, 2022
என் சாலிகிராமம் அலுவலகத்தில் இருந்து அடையாறு வீட்டிற்குச் செல்லும்போது தினமும் இந்த வழியாகச் செல்வேன். அப்போது டிரைவரிடம் சொல்லிக் கொண்டே செல்வேன், இங்குதான் தங்கியிருந்தேன் எனக் கூறுவேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நாம் ஏதாவது ஒன்று வேண்டுமென்று முயற்சி செய்தால் அது நிச்சயம் கிட்டும். ஆனால், வெற்றி வரும் போது ஒரு போதை வரும். அதனால் கண் மங்கிவிடும், காது செவிடாகிவிடும். அந்த வெற்றி போதை வரும்போது நம்மை நாமே எச்சரித்து பழைய நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும்.
நமக்கு தோள் கொடுத்தவர்களை, தூக்கிவிட்டவர்களை, உதவியவர்களை மறந்தால் மனிதம் போய்விடும். வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தான் படுத்துறங்கிய இடத்துக்கு வந்து உறங்கிச் செல்வதை இன்றும் வாடிக்கையாக வைத்திருகிறேன். இரவு 11 மணிக்கு மேல் அங்கு வந்து உறங்கி, அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டிற்கு சென்றுவிடுவேன்.
இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.