மேலும் அறிய

Vijay About Rajinikanth: தலைவர் நல்லா இருக்காரா... ரஜினிகாந்தை அக்கறையாக விசாரித்த விஜய்?

தலைவர் எப்படி இருக்கார் என்று நடிகர் ரஜினிகாந்தை நலம் விசாரித்ததாக நடிகர் கிரண் பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதைக்கு பின் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த மீம்கள் சமூக வலைதளங்களில் பரவலாக உலா வருகின்றன.

ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே இணையதளங்களில் வாக்குவாதம் நிலவி வருகிறது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். சூழல் இப்படி இருக்க நடிகர் விஜய் செய்த விஷயம் படுவைரலாகி வருகிறது. இது குறித்து கலை இயக்குனரும், நடிகருமான கிரண், பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

"ஜெயிலர் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த அதே இடத்தில் விஜய்யின் வாரிசு படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் அவரைப் பார்க்க சென்று இருந்தேன். அவர் என்னைப் பார்த்ததும் முதலில் நலம் விசாரித்தார். பின் ஜெயிலர் படப்பிடிப்பு குறித்து பேசினார். அதன்பின், தலைவர் எப்படி இருக்காருனு ரஜினி சார் குறித்து அக்கறையாக கேட்டார். ஏனென்றால் அவர் அப்போது தான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருந்தார். விஜய் சார் கூட ரஜினி சாரை தலைவர் என்று தான் கூப்புடுகிறார்.

மேலும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பின் முதல் நாளில் இயக்குநர் நெல்சனுக்கு காலையில் போன் கால் செய்து எழுப்பி விட்டதே விஜய் சார் தான். சீக்கிரம் போ என நெல்சனிடம் விஜய் சார் கூறியுள்ளார்"  என பேட்டியில் கிரண் பகிர்ந்து கொண்டுள்ளார். 

ரஜினி -விஜய் ரசிகர்களிடையே இணைய மோதல்போக்கு நிலவி வரும் சூழலில், இந்தப் பேட்டி ரசிகர்களை சற்றே ஆற்றுப்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சல் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தின் அதிகாலை காட்சிகள் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, காலை 9 மணிக்குப் பிறகே தமிழ்நாடு திரையரங்குகளில் முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ‘ஜெயிலர்’ திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அங்கு பெரும்பாலான திரையரங்குகளில் காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெங்களூருவில் முகுந்தா, பாலாஜி, பூர்ணிமா உள்ளிட்ட தனி திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் பெங்களூருவில் ஜெயிலர் படத்தின் அதிகாலைக் காட்சிகளை பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

Supreme Court On Manipur: மணிப்பூர் கலவரம் - 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Shocking Video: கொட்டும் மழையில் கொடூரம்..! என்.சி.சி மாணவர்களை தடியால் அடித்த சீனியர்...ஷாக் வீடியோ!

தலைப்பு செய்திகள்

அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
Gatta Kusthi 2 Trailer : ஹோம் மேக்கராக விஷ்ணு விஷால்...அசத்தும் கட்டா குஸ்தி 2 ஆம் பாகத்தின் டிரெய்லர்
Gatta Kusthi 2 Trailer : ஹோம் மேக்கராக விஷ்ணு விஷால்...அசத்தும் கட்டா குஸ்தி 2 ஆம் பாகத்தின் டிரெய்லர்
மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
டொயோட்டா ஹைப்ரிட் கார்கள்: இந்திய சந்தையில் இன்னோவா, ஹைரைடர், பார்ச்சூனர் ஆதிக்கம்!
டொயோட்டா ஹைப்ரிட் கார்கள்: இந்திய சந்தையில் இன்னோவா, ஹைரைடர், பார்ச்சூனர் ஆதிக்கம்!
Embed widget