Vidyut Jammwal: முழு நிர்வாணமாக புகைப்படம் பகிர்ந்த 'துப்பாக்கி' பட வில்லன் நடிகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த நடிகர் வித்யுத் ஜம்வால் முழு நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
வித்யுத் ஜம்வால்
1980ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பிறந்த நடிகர் வித்யுத் ஜம்வால். 2011ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடித்த சக்தி படத்தில் நடிகராக அறிமுகமானார் வித்யுத். இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரம் அவருக்கு பரவலான அங்கீகாரத்தை தமிழ் ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் கமாண்டோ , ஜங்குலி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இன்று வித்யுத் ஜம்பால் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் முழு நிர்வாணமாக இணையதளத்தில் புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வைரலாகும் முழு நிர்வாணப் புகைப்படம்
தான் கடந்த 14 ஆண்டுகாலமாக வருடத்தில் 7 முதல் 10 நாட்களுக்கு இமயமலை சென்று வருவதாகவும், இந்தக் குறுகிற காலத்தில் புகழ், சொகுசு என எல்லாவற்றையும் துறந்து இயற்கைக்கு நெருங்கி வாழ்வதாகவும் அவர் கூறியுள்ளார். இமயமலை காட்டில் முழு நிர்வாணமாக சமைத்து சாப்பிடும் புகைப்படத்தை அவர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
My retreat to the Himalayan ranges - “the abode of the divine” started 14 years ago. Before I realised, it became an integral part of my life to spend 7-10 days alone- every year. pic.twitter.com/HRQTYtjk6y
— Vidyut Jammwal (@VidyutJammwal) December 10, 2023
" ஆடம்பர வாழ்க்கையிலிருந்து வனாந்தரத்திற்குள் "எது நான் இல்லை” என்பதை அறிந்துகொள்கிறேன் "நான் யார்" என்பதை அறிந்துகொள்வதன் முதல் படி இது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது என்ன ப்ரோமோஷனா
I’m now ready and excited for my next chapter - CRAKK releasing in theatres on Feb 23rd, 2024 🥳
— Vidyut Jammwal (@VidyutJammwal) December 10, 2023
Pic courtesy - A Local Shepherd Mohar Singh
வித்யுத் ஜம்வால் நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தனது இந்தச் செயலுக்கு ஆன்மீக ரீதியிலான விளக்கங்களை அவர் கொடுத்தாலும், இது எல்லாம் ப்ரோமோஷன்களுக்காக காட்டப்படும் ஸ்டண்ட் என்று பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
இந்த பதிவுக்கு சில மணி நேரங்கள் முன்பாக வித்யுத் ஜம்வால் தான் நடித்திருக்கும் கிராக் என்கிற படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக இருப்பதாகப் பதிவிட்டுள்ளார். இந்த இரு பதிவுகளையும் தொடர்புபடுத்தி இணையதளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறார் வித்யுத் ஜம்வால்.