மேலும் அறிய

Actor Vidharth: இதுவரை யாரும் சொல்லாத சஸ்பென்ஸ் த்ரில்லர்: விதார்த் நடிப்பில் உருவாகும் ’லாந்தர்’

இது வரை யாரும் சொல்லாத சஸ்பென்ஸ் த்ரில்லராக லாந்தர் உருவாக உள்ளது. இந்தப் புதுமையான கதைக்களத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

எம் சினிமா பத்ரி தயாரிப்பில் சாஜிசலீம் இயக்கத்தில் விதார்த் -சுவேதா டோரத்தி நடிக்கும் புதுமையான சஸ்பென்ஸ் திரில்லர் 'லாந்தர்'

விதார்த்தின் அடுத்த படம்

திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரான பத்ரி தனது எம் சினிமா பேனரில் இந்தப் படத்தை தயாரிக்க, சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் புதிய திரைப்படத்திற்கு 'லாந்தர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. விபின், சஹானா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கும் நிலையில், பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லராக புதிய கோணத்தில் இப்படம் உருவாக உள்ளது. 

இயக்குநர் சாஜிசலீமின் இரண்டாவது படம் 'லாந்தர்' என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராம்குமாரிடம் 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் இயக்குநர் செல்லா அய்யாவு உடன் 'கட்டா குஸ்தி' திரைப்படத்திலும் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படைப்பான 'விடியும் வரை காத்திரு' திரைப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. 

சஸ்பென்ஸ் த்ரில்லர்

இச்சூழலில், 'லாந்தர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், லாந்தர் படம் குறித்து பேசிய இயக்குநர் சாஜிசலீம், "இது வரை யாரும் சொல்லாத சஸ்பென்ஸ் த்ரில்லராக லாந்தர் உருவாக உள்ளது. இந்தப் புதுமையான கதைக்களத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. எனது முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே என் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பத்ரி அவர்களுக்கு நன்றி," என்று கூறினார். 

'லாந்தர்' திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஞானசௌந்தர் கையாள உள்ள நிலையில், பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்த பிரவீன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஜெரோம் ஆலன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை விக்கி கொரியோகிராஃப் செய்கிறார்.

நடிகர் விதார்த் மற்றொருபுறம் சரத்குமார் உடன் இணைந்து நடித்து வரும் சமரன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முன்னதாக நிறைவடைந்தது. சிங்கம்புலி, ஆர். நந்தா, சித்திக், விஜய் டிவி புகழ் ஜார்ஜ், கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், திருமலை பாலுச்சாமி இப்படத்தை இயக்குகிறார்.

மேலும் படிக்க: Entertainment Headlines June 10: லைக்ஸ் அள்ளும் போர் தொழில்... மீண்டும் தந்தையான பிரபுதேவா.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget