Vanangan: வணங்கான் படத்தில் இருந்து விலகினார் சூர்யா..! பாலா அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..! என்ன நடந்தது...?
வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாக இயக்குனர் பாலா அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சூர்யா. இவர் தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
வணங்கான் படத்திலிருந்து விலகும் சூர்யா:
இந்த நிலையில், வணங்கான் கதை சூர்யாவுக்கு பொருத்தமாக இல்லாதது போல தோன்றுவதால் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக இயக்குனர் பாலா அறிவித்துள்ளார். மற்ற படி வணங்கான் படப்பணிகள் தொடரும் என்றும் பாலா கூறியுள்ளார். இது இருவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இயக்குனர் பாலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
(என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன் ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
உறுதியாக இணைவோம்:
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா, இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே 'வணங்காள்" திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம்.
Herewith we share the official note from the Desk of Director #Bala @IyakkunarBala @rajsekarpandian @2D_ENTPVTLTD#DirBala #வணங்கான் #Vanangaan pic.twitter.com/hXKsHHfD08
— Done Channel (@DoneChannel1) December 4, 2022
அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு. நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் என இயக்குனர் பாலா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வெற்றி கூட்டணி:
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நந்தா, பிதாமகன் படங்கள் மெகா கிட் கொடுத்தன. அதன் பின் பாலா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக படங்கள் உருவாக வாய்ப்பு அமையவில்லை.
இந்நிலையில் இருவரும் இணையும் விதமாக வணங்கான் திரைப்படம் அமைந்தது. படம் பாதி எடுக்கும் போதே இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், சூர்யா இத்திரைப்படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியானது.
ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளிட்டனர். அதையடுத்து, இப்படம் இருவரின் கூட்டணியில் வெளிவரும் என பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், இப்போது வணங்கான் படத்திலிருந்து, சூர்யா விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, பாலா மற்றும் சூர்யா ரசிகர்கள் இடையே மிகுந்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.
Also Read: Vanangaan: ‛வணங்கான் கதை இது தான்...’ போட்டு உடைத்த ஆர்.கே.சுரேஷ்!
Also Read: Rahul Gandhi: ’வெறுப்பு அரசியலால் இந்தியா வளர்ச்சி அடையாது’- பிரதமர் மோடியை சாடியராகுல் காந்தி